Actor Sri health condition: நடிகர் ஸ்ரீ என்ற ஸ்ரீராம் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அண்மையில் நடிகர் ஸ்ரீ தொடர்பான வீடியோ வைரலானது.
Actor Sri health condition: நடிகர் ஸ்ரீ என்ற ஸ்ரீராம் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அண்மையில் நடிகர் ஸ்ரீ தொடர்பான வீடியோ வைரலானது.
Published on: April 18, 2025 at 11:06 am
சென்னை ஏப். 18 2025: நடிகர் ஸ்ரீ என்ற ஸ்ரீராம் நடராஜன் தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் டைரக்ஷனில் வெளிவந்த வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் இயக்குனர் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திலும் லோகேஷ் கனகராஜன் மாநகரம் படத்திலும் நடித்து பெரும் புகழ் பெற்றார்.
இந்த நிலையில் நடிகர் ஸ்ரீ கடந்த சில ஆண்டுகளாக மாயமானார். அவரைப் பற்றிய செய்திகள் பெரும்பாலும் வெளியே வரவில்லை. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ஸ்ரீ தோன்றிய ஒரு வீடியோ வைரலானது.
இதனால் வரை அழகிய தோற்றத்தில் காணப்பட்ட ஸ்ரீ அந்த வீடியோவில் பரிதாபமாக இருந்தார். அவர் போதைப் பொருளுக்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் ஸ்ரீ குடும்பத்தினர் அறிக்கை
நடிகர் ஸ்ரீராம் குடும்பத்தினர் விடுத்துள்ள அறிக்கையில், ” நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்; அவரது உடல் நிலை குறித்து வதந்திகள் பரப்புவதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் இது நடிகர் ஷெய்கு மன உளைச்சலை ஏற்படுத்தலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “தற்போது நடிகர் ஸ்ரீ உடல் நலம் பெற்று திரும்புவதில் கவனம் செலுத்தி வருகிறார்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரபல மலையாள நடிகைக்கு பாலியல் தொல்லை: பரபரப்பு புகார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com