Actor Madhavan: 2,400 ஆண்டுகள் ஆட்சி செய்த சோழர்களின் வரலாற்றை பாட புத்தகங்களில் வைக்காதது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார் நடிகர் மாதவன்.
Actor Madhavan: 2,400 ஆண்டுகள் ஆட்சி செய்த சோழர்களின் வரலாற்றை பாட புத்தகங்களில் வைக்காதது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார் நடிகர் மாதவன்.
Published on: May 5, 2025 at 1:02 pm
மும்பை மே 5 2025: பள்ளிகளில் உள்ள வரலாறு பாடத்திட்டங்களில் சோழர்களின் வரலாறு வைக்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார் நடிகர் மாதவன். பள்ளி பாடத்திட்டங்களில் முகலாயர்கள் மற்றும் சுல்தான்களின் வரலாறு நீக்கப்பட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை தொடர்பாக நடிகர் மாதவன் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நடிகர் மாதவன், ” பள்ளிகளில் வரலாறு பாடத்தை நான் படித்த போது முகலாயர்கள் மற்றும் ஹரப்பா மொகஞ்சதாரோ நாகரிகங்கள், ஆங்கிலேயர்களின் ஆட்சி மற்றும் சுதந்திரப் போராட்டங்கள் குறித்து பல்வேறு அத்தியாயங்கள் இருந்தன. ஆனால் சேர சோழ பாண்டியர்கள் குறித்து ஒரே ஒரு அத்தியாயமே இருந்தது. ஆங்கிலேயர்களும் முகலாயர்களும் கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தார்கள்.
ஆனால் சோழப் பேரரசு 2,400 ஆண்டுகள் நீடித்தது. இந்த நிலையில் நமது வரலாற்றுப் பகுதி எங்கே சென்றது? வீரம் சரிந்த நமது மன்னர்களின் வரலாறு ஏன் போதிக்கப்படவில்லை? ” என்றார். மேலும் இந்த பாடத்திட்டங்களை தீர்மானிப்பது யார் எனவும் நடிகர் மாதவன் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து நமது வரலாற்றில் உள்ள அறிவியல் அறிவுகள் தற்போது கேலிக்குள்ளாக்கப்படுகின்றன எனவும் மாதவன் கூறினார்.
இதையும் படிங்க: ஆறு மாதம் வெயிட்டிங்.. ஜனநாயகன் பட குழுவை விமர்சித்த சனம் செட்டி..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com