நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தமிழ் பெண்ணை மணக்கிறார்.
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தமிழ் பெண்ணை மணக்கிறார்.
Published on: December 6, 2024 at 6:22 pm
Updated on: December 6, 2024 at 6:55 pm
Kalidas Jayaram wedding | மலையாள நடிகர் ஜெயராம், பார்வதி தம்பதியினரின் மகன் காளிதாஸ் ஜெயராமிற்கு வருகிற 8ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது.
இவர் தமிழ் பெண்ணான தரிணி காலிங்கராயர் என்பவரை மணக்க உள்ளார். இவர் 2021-ல் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் மூன்றாமிடம் பிடித்தவர் ஆவார். 24 வயதான தாரிணி நீலகிரியைச் சேர்ந்தவர். இவர்கள் ஏற்கனவே காதலித்து வந்த நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களது திருமணம் கேரளாவின் குருவாயூர் கோயிலில் நடைபெற உள்ளது. இது தொடர்பான ப்ரீ வெட்டிங் சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய ஜெயராம், “எங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான நாள்களில் இதுவும் ஒன்று. காளிதாஸின் திருமணம் என்ற கனவு எங்களுக்கு இப்போது நனவாகியுள்ளது” என்றார்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com