Jayam Ravi divorce case | “ஆர்த்திக்கு இரு முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்; என்னை இன்னொரு பெண்ணுடன் இணைத்து பேசுவது தவறானது” என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Jayam Ravi divorce case | “ஆர்த்திக்கு இரு முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்; என்னை இன்னொரு பெண்ணுடன் இணைத்து பேசுவது தவறானது” என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
Published on: September 21, 2024 at 1:16 pm
Jayam Ravi divorce case | தமிழ் சினிமா வட்டாரத்தில் நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி விவகாரத்து விவகாரம் பற்றி எரிகிறது. ஜெயம் ரவியின் விவாகரத்து தொடர்பான அறிக்கைக்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். என்னை கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து இருந்தார். இதையடுத்து ஜெயம் ரவிக்கு இளம் பாடகி ஒருவருடன் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின.
பாடகி உடன் தொடர்பா?
இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், “ஆதரவற்ற அந்தப் பெண், பலருக்கும் உதவி செய்து வருகிறார். இதில் அவரை தொடர்பு படுத்துவது தேவை அற்றது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “உண்மை ஒருநாள் நீதிமன்றத்தின் மூலமாக வெளிவரும்” என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, “என்னை இன்னொரு பெண்ணுடன் இணைத்துப் பேசுவது தவறானது” எனத் தெரிவித்துள்ளார்.
ஆர்த்திக்கு 2 முறை நோட்டீஸ்
தொடர்ந்து தனது மனைவி ஆர்த்தி குறித்து ஜெயம் ரவி, “விவகாரத்து குறித்து ஆர்த்திக்கு 2 முறை நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். தனக்கு தெரியாமல் அவர் எடுத்த முடிவு என்று ஆர்த்தி சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : சென்னையில் நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: மலையாள நடிகை மீதான புகார் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com