Actor Chiranjeevi: நடிகர் சிரஞ்சீவிக்கு கௌரவம் அளிக்கும் விதமாக இங்கிலாந்து அரசு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குகிறது. இந்த விருது வழங்கும் விழா 2025 மார்ச் 19ஆம் தேதி நடைபெறுகிறது.
Actor Chiranjeevi: நடிகர் சிரஞ்சீவிக்கு கௌரவம் அளிக்கும் விதமாக இங்கிலாந்து அரசு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குகிறது. இந்த விருது வழங்கும் விழா 2025 மார்ச் 19ஆம் தேதி நடைபெறுகிறது.
Published on: March 15, 2025 at 10:18 am
தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் சிரஞ்சீவி. 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி பிறந்த சிரஞ்சீவி இந்திய சினிமாவில் முக்கிய நபராக வலம் வருகிறார். இவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவரின் கலை சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மபூஷன் பத்மவி பூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கியுள்ளது.
இவரின் கலை சேவையை பாராட்டி ஆந்திரப் பிரதேச அரசும் ரகுபதி வெங்கையா விருது, மூன்று முறை நந்தி விருது, ஒன்பது முறை தென்னக பிலிம் ஃபேர் அவார்ட் என பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
அண்மையில் இவருக்கு கின்னஸ் சாதனை விருது கூட வழங்கப்பட்டது. சிரஞ்சீவியின் சினிமா வாழ்க்கையை பொருத்தவரை 1978-ல் தொடங்கியது. தனது ஆரம்ப காலகட்டத்தில் சிரஞ்சீவி துணை நடிகராகவும்; வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.
இதையும் படிங்க : நீ கதவுகளை அடைக்கிறாய்.. நான் முட்டி மோதி மூர்க்கமாய் உடைக்கிறேன்.. மாரி செல்வராஜ்!
நடிகர் சிரஞ்சீவி சினிமா மட்டுமின்றி அரசியலிலும் கால் பதித்தார். பிரஜியா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் சிரஞ்சீவி காங்கிரஸ் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
தற்போது இவர் அரசியலில் இருந்து விலகி காணப்படுகிறார். இவரின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் ஜனசேனா என்ற கட்சியை தொடங்கி, தற்போது மாநிலத்தின் துணை முதலமைச்சராக உள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு இங்கிலாந்து வாழ்நாள் சேவையாளர் விருதை வழங்கி கௌரவிக்க உள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமா துறையில் சிரஞ்சீவி ஆட்சி வரும் பங்கிற்கு கௌரவம் அளிக்கும் விதத்தில் எந்த விருது வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் 2025 மார்ச் மாதம் 19ஆம் தேதி இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நடிகை செளந்தர்யா மரணம் விபத்தா? கொலையா? புகார் முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com