Bobby Simha’s car driver arrested: சென்னையில் தாறுமாறாக கார் ஓடி விபத்தை ஏற்படுத்தியதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Bobby Simha’s car driver arrested: சென்னையில் தாறுமாறாக கார் ஓடி விபத்தை ஏற்படுத்தியதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on: April 19, 2025 at 2:03 pm
சென்னை ஏப்ரல் 19 2025: சென்னை கத்திப்பாரா சாலையில் கார் ஒன்று தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தியது. இந்த கார் விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இது அந்தப் பகுதியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் அந்த கார் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தியதில் ஆறுக்கும் மேற்பட்ட மற்ற வாகனங்களும் சேதத்துக்கு உள்ளாகின.
விபத்தை ஏற்படுத்திய காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை கத்திப்பாரா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை எடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்தனர்.
யார் இந்த கார் ஓட்டுநர்?
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. காரைத் தாறுமாறாக இயக்கி விபத்தை ஏற்படுத்திய நபர், பிரபல நடிகர் பாபி சிம்ஹாவின் ஓட்டுநர் ஆவார்.
பாபி சிம்ஹாவின் தந்தையை இறக்கி விட்டு திரும்பி வரும் வழியில் கத்திப்பாராவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது விபத்தை ஏற்படுத்திய நடிகர் பாபி சிம்காவின் ஓட்டுநர் புஷ்பராஜ் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுபோதையில் இருந்ததாக ஓட்டுநர் புஷ்பராஜை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகர் பாபி சிம்காவின் கார் சென்னையில் விபத்தை ஏற்படுத்திய விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க: வெளிநாட்டில் கார் பந்தயம்; விபத்தில் சிக்கிய அஜித் குமார் கார்.. சிறிய காயம் எனத் தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com