Actor Amresh Mahajan dead: இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் நடந்த ராம்லீலாவின் போது, தசரத மன்னராக நடித்துக் கொண்டிருந்த 73 வயது நடிகர் மேடையில் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோதே உயிரிழந்தார்.
Actor Amresh Mahajan dead: இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் நடந்த ராம்லீலாவின் போது, தசரத மன்னராக நடித்துக் கொண்டிருந்த 73 வயது நடிகர் மேடையில் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோதே உயிரிழந்தார்.
Published on: September 24, 2025 at 10:10 am
சிம்லா, செப்.24, 2025: இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் ராம்லீலாவின் போது 73 வயதான நடிகர் மேடையில் ஒரு காட்சியை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மகிழ்ச்சியான சூழல் திடீரென சோகமாக மாறியது. அம்ரேஷ் மகாஜன் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நடிகர், தசரத மன்னராக நாடகத்தில் நடித்திருந்தார்.
நடிகர் அம்ரேஷ் மகாஜன் ஒரு காட்சியை நடித்துக் கொண்டிருக்கும்போது மாரடைப்பால் மேடையில் இருந்து சரிந்து விழுந்தார். அவர் “விஸ்வாமித்திரர்” முனிவருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அந்தக் காட்சியில் தசரதர் தசரதர் சிரித்துக் கொண்டே, “நான் உங்களுக்காக என் உயிரைத் தியாகம் செய்வேன்” என்றார். இந்நிலையில் அவருக்கு மேடையிலே மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மேடையிலே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க; 1980ல் மலையாளத்தில் அறிமுகம்.. முதல் படமே வில்லன்.. தாதா சாகேப் பால்கே.. யார் இந்த மோகன் லால்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com