Stock Market today for 22 september 2025: இந்தியப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை சரிந்தன.
Stock Market today for 22 september 2025: இந்தியப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை சரிந்தன.
Published on: September 22, 2025 at 10:00 am
மும்பை, செப்.22, 2025: இந்திய பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி-50, திங்கட்கிழமை (செப்.22) வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின.
இதில் ஆரம்பம் முதலே ஐடி பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. இந்நிலையில், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 475.16 புள்ளிகள் சரிந்து 82,151.07 ஆகவும், தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி-50) 88.95 புள்ளிகள் சரிந்து 25,238.10 ஆகவும் காணப்பட்டது.
என்ன காரணம்?
புதிய ஹெச்.1-பி (H-1B) விசாக்களுக்கு அமெரிக்கா ஒரு முறை $100,000 கட்டணம் விதித்ததைத் தொடர்ந்து தொழில்நுட்பப் பங்குகள் சரிவுக்கு வழிவகுத்தன.
அதாவது இது இந்திய மதிப்பில் ரூ.90 லட்சம் ஆகும்.
ஆசிய சந்தைகள் உயர்வு
APEC உச்சிமாநாட்டிற்கு முன்னதாக டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அழைப்பை தொடர்ந்து ஆசிய பங்குச் சந்தைகள் உயர்வை சந்தித்தன.
இதற்கிடையில், ஜப்பான் வங்கி அதன் ETF பங்குகளை திரும்பப் பெறுவதற்கான திட்டங்களை அறிவித்ததை அடுத்து ஜப்பானின் நிக்கேய் 1.4% உயர்ந்தது. இந்த நிலையில், தென் கொரியாவின் கோஸ்பி 0.9% உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஹிண்டன்பர்க் அறிக்கை நிராகரிப்பு.. செபி அதிரடி.. அதானி பதில் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com