Fixed deposit: ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை எஸ்.பி.ஐ குறைத்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Fixed deposit: ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை எஸ்.பி.ஐ குறைத்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Published on: May 18, 2025 at 12:47 pm
சென்னை, மே 18 2025: நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை குறைத்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின் படி ஃபிக்ஸட் டெபாசிட் மீதான வட்டி விகிதங்கள் 20 பிபிஎஸ் அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளன. இந்த குறைக்கப்பட்ட வட்டி விகிதங்கள் மே 16 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன.
புதிய வட்டி விகிதம் என்ன?
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) பொது குடிமக்களுக்கு ரூ.3 கோடிக்குக் குறைவான தொகைகளுக்கு ஆண்டுக்கு 3.30% முதல் 6.70% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. முன்னதாக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அளவுள்ள டெபாசிட்டுக்கு ஆண்டுக்கு 3.50% முதல் 6.9% வரை வட்டி விகிதங்களை வழங்கியது. இதில், சிறப்பு நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் வராது. அவைகள் சிறப்பு வட்டி விகிதத்துக்குள் வருகின்றன.
எஸ்.பி.ஐ அம்ரித் விருஷ்டி சிறப்பு எஃப்டி ஸ்கீம்
இதற்கிடையில், எஸ்பிஐ தனது சிறப்பு நிலையான வைப்புத் திட்டமான அம்ரித் விருஷ்டி மீதான வட்டி விகிதத்தை 20 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. ம்ரித் விருஷ்டி திட்டம் 444 நாட்கள் என்ற குறிப்பிட்ட கால அளவைக் கொண்டுள்ளது. இந்த டெபாசிட் திட்டத்துக்கு 7.05% இலிருந்து 6.85% தற்போது வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8 சதவீதம் வட்டி; சீனியர் சிட்டிசன்கள் நோட் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com