Share Market today : இன்றைய மதிய வர்த்தகத்தில், இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிப்டி 0.6 சதவீதத்திற்கும் மேல் சரிவைக் கண்டன.
Share Market today : இன்றைய மதிய வர்த்தகத்தில், இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிப்டி 0.6 சதவீதத்திற்கும் மேல் சரிவைக் கண்டன.

Published on: January 19, 2026 at 7:07 pm
மும்பை, ஜன.19, 2026: இன்றைய மதிய வர்த்தகத்தில், இந்தியாவின் முக்கிய பங்குச் சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிப்டி 0.6 சதவீதத்திற்கும் மேல் சரிவைக் கண்டன.
அதன்படி, சென்செக்ஸ் 540 புள்ளிகள் சரிந்து 83,030-க்கு காணப்பட்டது. மேலும், நிப்டி 171 புள்ளிகள் குறைந்து 25,523-ஆக சரிந்து காணப்பட்டது.
இதில், ரியல்டி (Realty) துறை அதிகமாக இழுத்தது. அதன்பின் எண்ணெய் & எரிவாயு (Oil and Gas) மற்றும் மீடியா (Media) துறைகள் சரிவைக் கண்டன.
எனினும், சேவைகள் (Services) மற்றும் எஃப்.எம்.சி.ஜி (FMCG) துறைகள் மட்டும் எதிர்மறை போக்கை மீறி முன்னேற்றம் காட்டின. மொத்தத்தில், சந்தை இன்று குறைவான மனநிலையுடன் இருந்தாலும், சில துறைகள் மட்டும் வளர்ச்சியைத் தக்க வைத்திருந்தன.
அந்த வகையில், இன்றைய வர்த்தகத்தில் பி.எஸ்.இ. சென்செக்ஸ் −324.17 (0.39%) சரிந்து 83,246.18 ஆக காணப்பட்டது. நிஃப்டியை பொறுத்தமட்டில், -108.85 (-0.42%) சரிந்து, 25,585.50 ஆக காணப்பட்டது.
இதையும் படிங்க: Budget 2026.. 2027 நிதியாண்டு நிதி பற்றாக்குறை 4.2%
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com