SBI Mutual Fund: எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (செபி)-க்கு முதல் பங்கு வெளியீடு (IPO) ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இதில் அதிகபட்சம் 20.37 கோடி பங்குகள் வெளியிடப்பட உள்ளன.
SBI Mutual Fund: எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (செபி)-க்கு முதல் பங்கு வெளியீடு (IPO) ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இதில் அதிகபட்சம் 20.37 கோடி பங்குகள் வெளியிடப்பட உள்ளன.

Published on: March 23, 2026 at 12:03 pm
மும்பை, மார்ச் 23, 2026: எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், மூலதன சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி-க்கு முதல் பங்கு வெளியீடு (ஐ.பி.ஐ) ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இந்த, ஐ.பி.ஓ முழுவதும் விற்பனைக்கு வழங்கப்படும் பங்குகள் ஆகும்; புதிய பங்குகள் வெளியீடு இல்லை. மொத்தம் 20.37 கோடி ஈக்விட்டி பங்குகள் விற்பனைக்கு வரவிருக்கின்றன.
இந்த ஐ.பி.ஓ மூலம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் அமுன்டி இந்தியா ஹோல்டிங் (Amundi India Holding) ஆகிய நிறுவனங்கள் தங்களின் பங்குகளை குறைக்க உள்ளன. மேலும், இந்த ஐ.பி.ஓ பட்டியலிடப்பட்ட பின், எஸ்.பி.ஐ ஃபண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம், ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள பிற சொத்து மேலாண்மை நிறுவனங்களுடன் இணைகிறது.
இந்தியாவின் முதல் மியூச்சுவல் ஃபண்ட்
1987-இல் நிறுவப்பட்ட எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட், இந்தியாவின் முதல் யூ.டி.ஐ இணைக்கப்படாத மியூச்சுவல் ஃபண்ட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு.. முக்கிய பங்குகள் தடுமாற்றம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com