பெண்கள் அதிகாரமளிப்பு.. 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன்கள்.. எஸ்.பி.ஐ அறிமுகம்!

State Bank of India: பெண்கள் அதிகாரமளிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், எஸ்பிஐ 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ‘சிண்டிகேட்டட் சமூக காலவரையற்ற கடனை’ அறிமுகப்படுத்தியுள்ளது.

Published on: March 9, 2026 at 1:32 pm

புதுடெல்லி, மார்ச் 9, 2026: இந்திய ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ‘சிண்டிகேட்டட் சமூக காலவரையற்ற கடன் வசதியை’ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வசதி, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் அதிகாரமளிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சிண்டிகேட்டட் பரிவர்த்தனை, பெண்கள் அதிகாரமளிப்பை நோக்கமாகக் கொண்ட முக்கியமான மைல்கல்லாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகளாவிய சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக (ESG) நிதி துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிதி, சமூக தாக்கத்தை வேகப்படுத்துவதையும், பாலின இடைவெளியை குறைப்பதில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் அர்ப்பணிப்பையும், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளையும் வெளிப்படுத்துகிறது.

இதையும் படிங்க: டாடா கன்ஸ்யூமர் 5 சதவீதம் வரை உயர வாய்ப்பு.. முதலீட்டாளர்கள் நோட் பண்ணுங்க!

இது குறித்து, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைவர் சி. எஸ். ஷேட்டி, இந்த முக்கியமான சமூகக் கடன், சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக கொள்கைகளுக்கு எஸ்.பி.ஐ வங்கியின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்றார்.

மேலும், “பெண்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதில் கூர்மையான கவனம் செலுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார். உண்மையான முன்னேற்றம் பொருளாதார வளர்ச்சியால் மட்டுமல்ல, நேர்மறையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் திறன், பெண்களை அதிகாரமளித்தல் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கும் திறன் ஆகியவற்றால் தான் சாத்தியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.2.52 லட்சம் ரிட்டன்.. பெஸ்ட் லம்ப்சம் மியூச்சுவல் ஃபண்ட்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com