Home loan: வங்கியான, எஸ்.பி.ஐ ஹோம் லோன் வட்டியை உயர்த்தியுள்ளது. கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட மற்ற வங்கிகளின் ஹோம் லோன் வட்டி விகிதங்களை பார்க்கலாம்.
Home loan: வங்கியான, எஸ்.பி.ஐ ஹோம் லோன் வட்டியை உயர்த்தியுள்ளது. கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட மற்ற வங்கிகளின் ஹோம் லோன் வட்டி விகிதங்களை பார்க்கலாம்.
Published on: August 18, 2025 at 12:24 pm
சென்னை, ஆக.18 2025: நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ), இம்மாத தொடக்கத்தில் (ஆகஸ்ட், 2025) தொடக்கத்தில் இருந்து புதிய கடன் வாங்குபவர்களுக்கான ஹோம்லோன் வட்டியை உயர்த்தியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் 4-6 வரை நடைபெற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் கூட்டத்திற்கு முன்னதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் பணவியல் கொள்கைக் கூட்டத்திற்குப் பிறகும் ரெப்போ விகிதம் 5.55% இல் மாறாமல் இருந்தது.
எஸ்.பி.ஐ ஹோம்லோன் வட்டி விகிதம்
தற்போது, ஹோம்லோன்களுக்கான அதிகபட்ச வட்டி விகிதத்தை எஸ்.பி.ஐ 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 8.70% ஆக உயர்த்தியுள்ளது. முன்பு இது 8.45% ஆக இருந்தது. அதே நேரத்தில், குறைந்த வட்டி விகிதம் 7.50% ஆகவே உள்ளது. அதாவது, இப்போது புதிய வாடிக்கையாளர்கள் தங்கள் கடன் விவரம் மற்றும் கடன் தொகையைப் பொறுத்து 7.50% முதல் 8.70% வரை வட்டி விகிதத்தை செலுத்த வேண்டியிருக்கும்.
மற்ற வங்கிகளில் வட்டி விகிதம் என்ன?
பேங்க் ஆஃப் பரோடா வங்கி 7.45% முதல் 9.20% வரை வட்டி விகிதம் வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் கடன் தொகை, சிபில் மதிப்பெண் மற்றும் கடன் காப்பீட்டுத் தொகையைப் பொறுத்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் வீட்டுக் கடன் வட்டி விகிதம் 7.45% இலிருந்து தொடங்குகிறது. விகிதங்கள் வெவ்வேறு தொகைகள் மற்றும் கால அளவுகளைப் பொறுத்து மாறுபடும்.
கனரா வங்கியின் வட்டி விகிதம் 7.40% முதல் 10.25% வரை இருக்கும்.
ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கியை பொருத்தவரை வட்டி விகிதம் 7.90% இலிருந்து தொடங்குகிறது. இதில் வீட்டுக் கடன், இருப்பு பரிமாற்றம், வீடு புதுப்பித்தல் மற்றும் நீட்டிப்பு கடன் ஆகியவை அடங்கும்.
மற்றொரு தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்-ஐ பொருத்தவரை வட்டி விகிதம் 7.70% இலிருந்து தொடங்குகிறது. ஆனால் சுயவிவரத்தைப் பொறுத்து 8.75% முதல் 9.80% வரை இருக்கலாம்.
கோடக் மஹிந்திரா வங்கியின் வட்டி விகிதம் 7.99% இலிருந்து தொடங்குகிறது.
இதையும் படிங்க : ரூ.10 ஆயிரம் வீதம் எஸ்.ஐ.பி முதலீடு, ரூ.14 லட்சம் ரிட்டன்.. பெஸ்ட் பரஸ்பர நிதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com