SBI Amrit Vrishti: எஸ்.பி.ஐ அம்ரித் விருஷ்டி வட்டி விகிதத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
SBI Amrit Vrishti: எஸ்.பி.ஐ அம்ரித் விருஷ்டி வட்டி விகிதத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
Published on: May 20, 2025 at 8:38 pm
Updated on: May 20, 2025 at 8:39 pm
சென்னை, மே 20 2025: பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, ஃபிக்ஸட் டெபாசிட் மீதான வட்டி விகிதங்களை இரண்டாவது முறையாக திருத்தியுள்ளது. தற்போது, ஃபிக்ஸட் டெபாசிட் மீதான வட்டி விகிதங்கள் 20 பி.பி.எஸ் அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ஏப்.16 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், எஸ்.பி.ஐ-யின் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டமான அம்ரித் விருஷ்டி வட்டி விகிதங்களும் குறைக்கப்பட்டுள்ளன.
எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்
எஸ்.பி.ஐ வங்கி 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்திலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.30% வட்டி விகிதத்தை வழங்குகிறது. முன்பு 7.50 சதவீதம் வட்டியை வழங்கியது.
தொடர்ந்து, 2-3 ஆண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் 7.20 சதவீதத்தில் இருந்து 7.05 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 5 ஆண்டு வட்டி விகிதங்கள் 7.40 சதவீதத்தில் இருந்து 7.25 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஐ அம்ரித் விருஷ்டி
இந்த நிலையில், எஸ்.பி.ஐ அம்ரித் விருஷ்டி எஃப்.டி வட்டி விகிதங்கள் 7.05 சதவீதத்தில் இருந்து 6.85 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 444 நாள்கள் முதலீடு செய்ய வேண்டும்.
இதையும் படிங்க : 5 ஆண்டுகளில் 25 சதவீதம் வரை ரிட்டன்; பெஸ்ட் ஃபோகஸ்டு மியூச்சுவல் ஃபண்ட்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com