Punjab National Bank cuts rates on retail loans: சில்லறை கடன்களுக்கான விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் வரை பஞ்சாப் நேஷனல் வங்கி குறைத்துள்ளது. இந்நிலையில், வங்கி தற்போது 8.50% இல் தொடங்கி 0.05% குறைந்த விகிதத்தை வழங்குகிறது.
Punjab National Bank cuts rates on retail loans: சில்லறை கடன்களுக்கான விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் வரை பஞ்சாப் நேஷனல் வங்கி குறைத்துள்ளது. இந்நிலையில், வங்கி தற்போது 8.50% இல் தொடங்கி 0.05% குறைந்த விகிதத்தை வழங்குகிறது.
Published on: February 26, 2025 at 7:00 am
Updated on: February 25, 2025 at 11:17 pm
பஞ்சாப் நேஷனல் வங்கி சில்லறை கடன்கள்: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை 25 பி.பி.எஸ் (bps) குறைத்தது. இதையடுத்து, நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, வீட்டுவசதி மற்றும் வாகனக் கடன்கள் உள்ளிட்ட சில்லறை முன்பணங்களுக்கான வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது.
இந்தத் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் 2025 பிப்ரவரி 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இது குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மாறிவரும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப இந்த விகித சரிசெய்தல் கொண்டு வரப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட விகிதங்கள் வீட்டுக் கடன்கள், கார் கடன்கள், கல்வி மற்றும் தனிநபர் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வட்டி விகிதம்
பஞ்சாப் நேஷனல் வங்கியில், வாகனக் கடன்களைப் பொறுத்தவரை, புதிய மற்றும் பயன்படுத்திய கார்களுக்கு நிதியளிப்பதற்கான விகிதம் ஆண்டுக்கு 8.50%ல் இருந்து தொடங்குகிறது.
அந்த வகையில், 8.50% இல் தொடங்கி 0.05% குறைந்த விகிதம் வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரூ.1,000 முதல் ரூ.30 லட்சம் வரை முதலீடு.. மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com