பேடிஎம் நிறுவன பங்குகள் 7.7 சதவீதம் சரிவு: என்ன காரணம்?

Paytm Shares Slide | பேடிஎம் நிறுவன பங்குகள் 7.7 சதவீதம் சரிந்து காணப்பட்டன.

Published on: October 22, 2024 at 7:13 pm

Updated on: October 22, 2024 at 7:26 pm

Paytm Shares Slide| பேடிஎம் (Paytm) நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 (One97) கம்யூனிகேஷன் பங்குகள் 7.7% சரிந்து, ரூ.669.80 ஆக குறைந்தது. 25ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ. 930 கோடி நிகர லாபம் ஈட்டியது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலாண்டில் ரூ.290 கோடியாக இருந்தது.

இருப்பினும், நிறுவனத்தின் செயல்பாடுகளின் வருவாய் 34% குறைந்து, 2025 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ. 1,659 கோடியாக இருந்தது. இது 2ஆம் நிதியாண்டில் 1,095 கோடி ரூபாயாக இருந்தது.
இதற்கிடையில், 495 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாக உள்ளது. முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் இழப்பு 70% அதிகரித்துள்ளது.

25ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 839 கோடியாக ஒருங்கிணைந்த நிகர இழப்பை நிறுவனம் பதிவு செய்தது. செயல்பாடுகள் மூலம் அதன் வருவாய் 25ஆம் நிதியாண்டின் முந்தைய காலாண்டில் ரூ.1,502 கோடியாக இருந்தது, இது 24ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.2,342 கோடியாக இருந்தது.

கடந்த ஐந்து வர்த்தக அமர்வுகளில் Paytm பங்கு 4.3% சரிந்துள்ளது. இருப்பினும், கடந்த ஒரு மாதத்தில் 7% மற்றும் கடந்த ஆறு மாதங்களில் 84% வருமானத்தை அளித்துள்ளது. ஆண்டு முதல் இன்றுவரை, பங்கு 8% கொடுத்துள்ளது. இருப்பினும், கடந்த ஓராண்டில் 25% செல்வத்தை அழித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட்; 8.60 சதவீதம் வட்டி: மூத்தக் குடிமக்கள் நோட் பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com