ரூ.33 லட்சமாக உயர்ந்த ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு.. பராக் பரிக் ஃபண்ட் தெரியுமா?

Parag Parikh fund: பராக் பரிக் ப்ளெக்ஸி கேப் ஃபண்ட் நேரடி திட்டம் கடந்த 10 ஆண்டுகளில் மிகச் சிறந்த வருமானத்தை வழங்கியுள்ளது. அதாவது, மாதம் ₹10,000 முதலீடு செய்திருந்தால், இன்று அது சுமார் ₹33 லட்சமாக வளர்ந்திருக்கும்.

Published on: February 23, 2026 at 12:14 pm

Updated on: February 23, 2026 at 12:19 pm

சென்னை, பிப்.23, 2026: பராக் பரிக் ப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்ட் கடந்த 3, 5, 10 ஆண்டுகளிலும், தனது பென்ஞ்மார்க் மற்றும் கேட்டகிரி அவரேஜ்-ஐ விட அதிக வருமானம் கொடுத்துள்ளது. அதாவது, இதன் ஆண்டு வருவாய் 482% ஆகும். அந்த வகையில், இந்தத் திட்டத்தில் மாதம் ₹10,000 முதலீடு செய்திருந்தால், இன்று அது சுமார் ₹33 லட்சமாக வளர்ந்திருக்கும்.

3, 5, 10 ஆண்டு ரிட்டன்

வ.எண்காலம்ஃபண்ட் ரிட்டன்
01 3 ஆண்டு20.89%
02 5 ஆண்டு18.46%
03 10 ஆண்டு19.24%

(தரவுகள்: வேல்யூ ரிசர்ஜ் (ஃபேக்ட் ஷீட்)

லம்ப்சம் முதலீடு

இந்தத் திட்டத்தில் ரூ.1 லட்சம் 3 ஆண்டுகளில் ரூ. 1,76,694 ஆகவும், 5 ஆண்டுகளில் ரூ.2,33,242 ஆகவும், 10 ஆண்டுகளில் ரூ. 5,80,877 ஆகவும் வளர்ச்சி கண்டுள்ளது.

எஸ்.ஐ.பி முதலீடு

3 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி 13.73 சதவீத வளர்ச்சியுடன் ரூ.4,40,121 ஆகவும், 5 ஆண்டுகால முதலீடு 16.18 சதவீதம் ஆக வளர்ந்து ரூ.8,95,398 ஆகவும், 10 ஆண்டுகால எஸ்.ஐ.பி ரூ.32 லட்சத்து 83 ஆயிரத்து 346 ஆகவும் வளர்ச்சி கண்டுள்ளது.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. கடந்த கால வருவாய், எதிர்கால ரிட்டனுக்கு உத்தரவாதம் அளிக்காது.

இதையும் படிங்க: கிளீன் மேக்ஸ் ஐ.பி.ஓ வெளியீடு.. மார்ச் 2 பட்டியல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com