Maharashtra: மில்கி மிஸ்ட்- மகாராஷ்டிரா இடையே ₹1,130 கோடிக்கு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
Maharashtra: மில்கி மிஸ்ட்- மகாராஷ்டிரா இடையே ₹1,130 கோடிக்கு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

Published on: January 24, 2026 at 1:16 pm
மும்பை ஜனவரி 24, 2026;மில்கி மிஸ்ட் நிறுவனம், மகாராஷ்டிராவில் ரூ. 1,130 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், மில்கி மிஸ்ட் தலைமை செயல் அதிகாரி கே. ரத்னம் மற்றும் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கையெழுத்துள்ளனர். இந்த ஒப்பந்தமானது, சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் பகுதியில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் எட்டப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், மகாராஷ்டிராவில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் உற்பத்தி, தொழில்துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்தல் ஆகும். மேலும், இந்த ஒப்பந்தம், மகாராஷ்டிராவின் தொழில்துறை முன்னேற்றத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க; இண்டிகோ Q3 FY26 லாபம் 77.5% வீழ்ச்சி.. என்ன காரணம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com