Air India plane crash: ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமைகோரல் தீர்வு செயல்முறைக்கான விதிமுறைகளை எல்.ஐ.சி எளிதாக்கியுள்ளது.
Air India plane crash: ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமைகோரல் தீர்வு செயல்முறைக்கான விதிமுறைகளை எல்.ஐ.சி எளிதாக்கியுள்ளது.
Published on: June 14, 2025 at 10:47 am
சென்னை, ஜூன் 14 2025: உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமைகோரல் தீர்வு செயல்முறையை எளிதாக்கியுள்ளதாக எல்.ஐ.சி காப்பீடு நிறுவனம் அறிவித்துள்ளது.
எல்.ஐ.சி இரங்கல்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 13 2025) தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.
அந்த இரங்கல் செய்தியில், “அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் ஏர் இந்தியா விமானம் Al 171 இல் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என பலியானவர்களுக்கு இந்திய ஆயள் காப்பீடு கழகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளது.
எல்.ஐ.சி க்ளைம் செட்டில்மெண்ட்
மேலும், “பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க எல்.ஐ.சி ஆஃப் இந்தியா உறுதிபூண்டுள்ளது. தொடர்ந்து, நிதி நிவாரணம் வழங்க உரிமைகோரல் தீர்வுகளை விரைவுபடுத்தும்” எனத் தெரிவித்துள்ளது.
ஆவணங்கள் என்னென்ன?
தொடர்ந்து, “எல்.ஐ.சி பாலிசிகளை கோருபவர்களின் கஷ்டங்களைக் குறைக்க எல்.ஐ.சி ஆஃப் இந்தியா பல சலுகைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, இறப்புச் சான்றிதழ்களுக்குப் பதிலாக, விமான விபத்தில் பாலிசிதாரரின் மரணம் அல்லது மத்திய/மாநில அரசு/விமான நிறுவனங்களால் செலுத்தப்பட்ட இழப்பீடு குறித்த அரசுப் பதிவேடுகளில் உள்ள எந்தவொரு ஆதாரமும் மரணச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு, ரூ.27 லட்சம் ரிட்டன்; டாப் லார்ஜ்கேப் ஃபண்ட்கள்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com