Latest Interest Rates | செல்வ மகள் சேமிப்பு திட்டம் மற்றும் பி.பி.எஃப் உள்ளிட்ட அஞ்சலக சிறுசேமிப்பு வட்டி விகிதங்கள் திருத்தப்பட்டுள்ளன.
Latest Interest Rates | செல்வ மகள் சேமிப்பு திட்டம் மற்றும் பி.பி.எஃப் உள்ளிட்ட அஞ்சலக சிறுசேமிப்பு வட்டி விகிதங்கள் திருத்தப்பட்டுள்ளன.
Published on: October 6, 2024 at 11:34 am
Latest Interest Rates | சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் அரசால் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால், அடுத்த காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்டங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நிதி அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “2024-25 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அக்டோபர் 1, 2024 முதல் டிசம்பர் 31, 2024 உடன் முடிவடையும், இரண்டாவது காலாண்டிற்கு அறிவிக்கப்பட்ட வட்டி விகிதங்களில் இருந்து மாறாமல் இருக்கும்.” என்று தெரிவித்துள்ளது.
இதனால், பொது வருங்கால வைப்பு நிதி (பி.பி.எஃப்.), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்.சி.எஸ்.எஸ்.), சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்.எஸ்.ஒய்.), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி), அஞ்சலக நேர வைப்புத்தொகை (பி.ஓ.டி.டி.), மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (பி.ஓ.எம்.ஐ.எஸ்)உள்ளிட்ட அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது.
திட்டம் | வட்டி விகிதங்கள் (அக்-டிச 2024) % |
---|---|
சேமிப்பு வைப்பு | 4.0 |
1 ஆண்டு கால வைப்பு | 6.9 |
2 ஆண்டு கால வைப்பு | 7.0 |
2 ஆண்டு கால வைப்பு | 7.1 |
5 ஆண்டு கால வைப்பு | 7.5 |
5 ஆண்டு தொடர் வைப்பு | 6.7 |
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் | 8.2 |
மாதாந்திர வருமான கணக்கு திட்டம் | 7.4 |
தேசிய சேமிப்புச் சான்றிதழ் | 7.7 |
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் | 7.1 |
கிசான் விகாஸ் பத்ரா | 7.5 (115 மாதங்களில் முதிர்ச்சியடையும்) |
சுகன்யா சம்ரித்தி கணக்கு | 8.2 |
கடைசியாக டிசம்பர் 2023 இல் முடிவடைந்த காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டது. சில சிறுசேமிப்புத் திட்டங்களில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. ஆனால் ஏப்ரல்-ஜூன் 2020 முதல் பிபிஎஃப் விகிதம் 7.1% ஆக உள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஏற்கனவே அதன் விகிதங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்தப் போக்கு தொடர்ந்தால், இந்தியாவிலும் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com