444 Day Special Fixed Deposits: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐ.டி.பி.ஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாட் அண்ட் சிற்த் வங்கி ஆகியவை 444 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வழங்குகின்றன.
444 Day Special Fixed Deposits: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐ.டி.பி.ஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாட் அண்ட் சிற்த் வங்கி ஆகியவை 444 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வழங்குகின்றன.
Published on: May 4, 2025 at 11:08 am
சென்னை, மே4 2025: பொதுவாக வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களின் நலன்களை கருதி, சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐ.டி.பி.ஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாட் அண்ட் சிற்த் வங்கி வழங்கும் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
ஐ.டி.பி.ஐ வங்கி உத்ஷவ் டெபாசிட் திட்டம்
ஐ.டி.பி.ஐ வங்கி உத்சவ் டெபாசிட் திட்டத்தில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி, இது 300 நாள் மற்றும் 375 நாள் நிலையான வைப்புத் திட்டங்களை கொண்டது ஆகும்.
இதற்கிடையில், 444 நாள் நிலையான வைப்புத் திட்டத்திற்கு பொதுகுடிமக்களுக்கு தற்போது வங்கி 7.25 சதவீதமும் (7.35 சதவீதத்திலிருந்து குறைவு), மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதமும் (7.85 சதவீதத்திலிருந்து குறைவு) வட்டி வழங்குகிறது.
மேலும், சிரஞ்சீவ் நிலையான வைப்புத் திட்டத்தின் கீழ் சூப்பர் மூத்த குடிமக்கள் 7.90 சதவீதம் வரை வட்டியை பெறுவார்கள்.
எஸ்.பி.ஐ அம்ரித் விருஷ்டி திட்டம்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ஏப்ரல் 15, 2025 முதல் 444 நாள் கால அவகாசத்துடன், அம்ரித் விருஷ்டி எனப்படும் ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தில் பொதுகுடிமக்களுக்கு ஆண்டுக்கு 7.05 சதவீத குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது முந்தைய விகிதத்தை விட 20 அடிப்படை புள்ளிகள் குறைவு ஆகும்.
அதேநேரம் மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 7.55 சதவீதம் சம்பாதிப்பார்கள். இந்த சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டின் சலுகையின் முடிவு தேதியை வங்கி இன்னும் குறிப்பிடவில்லை.
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி சமீபத்தில் அதன் சிறப்பு நிலையான வைப்பு சலுகைகளை திருத்தியுள்ளது. அதன் 444 நாள் நிலையான வைப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் 20 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், ஃபி்க்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் 7.30 சதவீதத்திலிருந்து 7.10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா
பேங்க் ஆஃப் பரோடா, உத்சவ் வைப்புத் திட்டத்தை மாற்றியமைத்துள்ளது. மேலும், ஏப்ரல் 7, 2025 முதல் ‘பாப் ஸ்கொயர் டிரைவ் வைப்புத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் 444 நாட்கள் முதலீடு செய்யலாம். இதில், ரூ.3 கோடிக்குக் குறைவான வைப்புத்தொகைகளுக்குப் பொருந்தும்.
அந்த வகையில், பொது குடிமக்களுக்கு 7.15 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.65 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்திய இன்டஸ்இந்த் வங்கி; ஷாக் கொடுத்த மகிந்திரா வங்கி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com