7.65 சதவீதம் வரை வட்டி: 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?

fixed deposit | 3 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு சிறந்த ரிட்டன் வழங்கும் வங்கி தெரியுமா? இங்கு பல்வேறு வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் உள்ளன.

Published on: September 7, 2024 at 2:57 pm

Updated on: September 7, 2024 at 2:58 pm

fixed deposit | ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன், முதலீட்டாளர்கள் வெவ்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். மேலும், ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதமும் வங்கிக்கு வங்கி வேறுபடுகின்றன.

அந்த வகையில், முக்கிய வங்கிகள் வழங்கும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம். இந்த வட்டி விகிதங்கள் 3 ஆண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வழங்கப்படுவது ஆகும்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மூன்று வருட ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு பொதுமக்களுக்கு 6.75 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீதமும் வட்டி வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜூன் 15, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி 3 ஆண்டுகால எஃப்.டி.க்கு பொதுகுடிமக்களுக்கு 7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதமும் வட்டியை வங்கி வழங்குகிறது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ஆக.1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.

கோடக் மகிந்திரா வங்கி

கோடக் மகிந்திரா வங்கி 3 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு சாதாரண குடிமக்களுக்கு 7 சதவீத வருடாந்திர வட்டியையும் மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீதத்தையும் வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜூன் 14ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 3 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு பொதுமக்களுக்கு 7 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 7.5 சதவீதமும் வட்டி வழங்குகிறது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி

ஹெச்.டி.எஃப்.சி வங்கி 3 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு பொதுமக்களுக்கு 7 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 7.5 சதவீதமும் வட்டி வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ஜூலை 24, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா 3 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு பொதுமக்களுக்கு 7.15 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 7.75 சதவீதமும் வட்டி வழங்குகிறது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ஆக.1, 2024 முதல் அமலுக்கு வருகிறது.

(Disclaimer | திராவிடன் டைம்ஸின் இந்தக் கட்டுரை ஃபிக்ஸட் டெபாசிட் தொடர்பான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. முதலீடு செய்வதற்கு முன்னர் செபியில் பதிவு செய்த முதலீட்டு ஆலோசகரிடம் ஆலோசனைகள் மேற்கொள்வது சிறந்தது)

இதையும் படிங்க :ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி இல்லையா? டி.டி.வி தினகரன் கேள்வி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com