Flight Seats: விமானங்களில் 60% இருக்கைகளுக்கு, “இருக்கை கட்டணம்” வசூலிக்க கூடாது என்ற உத்தரவு வெளியாகியுள்ளது.
Flight Seats: விமானங்களில் 60% இருக்கைகளுக்கு, “இருக்கை கட்டணம்” வசூலிக்க கூடாது என்ற உத்தரவு வெளியாகியுள்ளது.

Published on: March 18, 2026 at 6:23 pm
புதுடெல்லி, மார்ச் 18, 2026: விமான யணிகளின் வசதியை வலுப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், அனைத்து இந்திய விமான நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான நடைமுறைகளை நிலைநிறுத்தவும் அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவுப்படி விமானங்களில் 60% இருக்கைகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விமானங்களில் 60% இருக்கைகள் இலவசம்
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனைத்து விமான நிறுவனங்களும் குறைந்தபட்சம் 60% இருக்கைகளை பயணிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது நியாயமான அணுகலை உறுதி செய்வதற்காக செய்யப்பட்டுள்ளது என்று வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது.
இதுவரை, பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அல்லது ஆன்லைனில் செக்-இன் செய்யும்போது சில இருக்கைகள் மட்டுமே இலவசமாக வழங்கப்பட்டன.
ஒரே PNR-இல் டிக்கெட் முன்பதிவு..
மேலும், மத்திய அரசின் மற்றொரு முக்கிய உத்தரவு என்னவெனில், பயணிகள் ஒரே PNR (Passenger Name Record) கீழ் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால், அவர்கள் ஒன்றாக அமர வேண்டும்.
அத்தகைய சந்தர்ப்பங்களில், பயணிகள் அருகருகே அமர வேண்டும் என்பதையும் அரசு “முன்னுரிமை” அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜி.எஸ்.பி கிராப் சயின்ஸ் IPO.. ரூ.400 கோடி திரட்ட இலக்கு.. ஒரு பங்கின் விலை ரூ.10!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com