நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி.. ரூ.360 சரிந்த தங்கம்!

Gold Rate Today: நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தங்கத்தின் விலையில் இன்று ( மார்ச் 6 2025) அதிரடி மாற்றங்கள் நிகழ்தன. வெள்ளி கிராமுக்கு ரூபாய் ஒன்று அதிகரித்து விற்பனை ஆகிறது.

Published on: March 6, 2025 at 10:19 am

Updated on: March 6, 2025 at 5:33 pm

இன்றைய தங்கம் விலை (06-03-2025): நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக தங்கத்தின் விலை இன்று ( மார்ச் 6 2025) சரிந்து விற்பனையாகி வருகிறது. அந்த வகையில் ஒரு கிராம் 22 ஆபரண கேரட் தங்கத்தின் விலை ரூபாய் 8020 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு பவுன் ரூ.64,160 என விற்பனையாகி வருகிறது.

அந்த வகையில் தங்கத்தை பொருத்தமட்டில் கிராமுக்கு ரூபாய் 45 குறைந்து, பவுனுக்கு ரூபாய் 360 வரை சரிந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தை பொருத்தமட்டில் கிராம் ரூபாய் 8749 என நிர்ணயிக்கப்பட்டு பவுன் ரூபாய் 69,992 என உள்ளது.

வெள்ளி விலை

புதன்கிழமை (மார்ச் 5 2025) கிராம் வெள்ளி ரூபாய் 107 விற்பனையாகி வந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் கிராம் வெள்ளி இன்று ரூபாய் 108 ஆக நிர்ணயிக்கப்பட்டு, ஒரு கிலோ பார் வெள்ளி ரூபாய் ஒரு லட்சத்து 8000 ஆக விற்பனையாகி வருகிறது. ஆக வெள்ளியை பொருத்தமட்டில் கிலோ ரூபாய் ஆயிரம் வரை உயர்வு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க Special FD Schemes:எஃப்.டிக்கு 8.05 சதவீதம் வட்டி.. இந்த வங்கிகளை செக் பண்ணுங்க!

மேற்கு ஆசியாவில் பணிபுரியும் 593 தமிழக மீனவர்கள்.. மீட்பதில் சிக்கல், நீதிமன்றத்தில் மத்திய அரசு!
Madurai High Court

மேற்கு ஆசியாவில் பணிபுரியும் 593 தமிழக மீனவர்கள்.. மீட்பதில் சிக்கல், நீதிமன்றத்தில் மத்திய

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com