Gold Rate Today: தங்கம் இன்று (ஏப்ரல் 2 2025) அதிரடியாக உயர்ந்து வணிகமாகி வருகிறது. சவரன் ரூ. 68 ஆயிரத்தை கடந்து விற்னையாகிறது.
Gold Rate Today: தங்கம் இன்று (ஏப்ரல் 2 2025) அதிரடியாக உயர்ந்து வணிகமாகி வருகிறது. சவரன் ரூ. 68 ஆயிரத்தை கடந்து விற்னையாகிறது.
Published on: April 2, 2025 at 10:11 am
சென்னை ஏப்ரல் 2, 2025: மஞ்சள் உலோகம் எனப்படும் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் சவரன் ரூ. 68 ஆயிரத்தை கடந்துள்ளது. தொடர்ந்து தினமும் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது. இந்நிலையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் குறித்து இப்போது பார்க்கலாம்.
தங்கம் விலை
தங்கம் விலை நேற்று முன்தினம் கிராம் ரூ. 8,450 ஆகவும் 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ரூ. 67,600 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து சவரனுக்கு ரூ. 480 உயர்ந்தது. இதனால் தங்கம் கிராம் ரூ. 8510 ஆகவும், சவரன் ரூ. 68,080 ஆகவும் விலை உயர்ந்து நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. இன்றும் மாற்றமின்றி கிராம் ரூ. 8510 ஆகவும் சவரன் ரூ. 68,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தமட்டில் நேற்று கிராம் ரூ. 114 ஆகவும் ஒரு கிலோ கொண்ட பார் வெள்ளி ரூ. 114,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இன்றும் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே தொடர்கிறது.
இதையும் படிங்க பெஸ்ட் எல்.ஐ.சி ஸ்கீம்: ஒரு நாளைக்கு ரூ.45 சேமிப்பு, ரூ.25 லட்சம் ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com