ஏறிய வேகத்தில் இறங்குமா தங்கம்? இன்று சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

Gold rate today |சென்னையில் தங்கம் விலை இன்று சரிந்து காணப்படுகிறது. பவுனுக்கு ரூ.200 வரை குறைந்துள்ளது.

Published on: September 19, 2024 at 10:49 am

Updated on: September 19, 2024 at 11:06 am

Gold Rate today in Chennai | சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,825 ஆக நிர்ணயிக்கப்பட்டு, பவுன் ரூ.54,600 ஆக காணப்படுகிறது.

24 காரட் தங்கம் ரூ.7,280 ஆக நிர்ணயிக்கப்பட்டு, ரூ.58,240 ஆக காணப்படுகிறது. இது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் பவுனுக்கு ரூ. 200 குறைவாகும்

வெள்ளி விலை

வெள்ளியை பொறுத்தமட்டில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது. கிராம் ரூ.96 ஆக நிர்ணயிக்கப்பட்டு, கிலோ வெள்ளி ரூ.96 ஆயிரமாக உள்ளது.

மற்ற நகரங்களில் தங்கம் விலை

தங்கத்தை பொறுத்தவரை மும்பையில் 10 கிராம் ரூ. 73,270 ஆகவும், கொல்கத்தாவில் 10 கிராம் ரூ.73,130 ஆகவும், டெல்லியில் ரூ.73,100 ஆகவும் காணப்படுகிறது.

மற்ற நகரங்களில் வெள்ளி விலை

டெல்லியில் வெள்ளி கிலோ ரூ.87,900 ஆகவும், கொல்கத்தாவில் கிலோ ரூ.87,930 ஆகவும், மும்பையில் ரூ. 88,050 ஆகவும் காணப்படுகிறது.

எம்.சி.எக்ஸ் (MCX) ஃபியூச்சர்ஸ்

அக்டோபர் 2024 இல் காலாவதியாகும் தங்க MCX எதிர்கால ஒப்பந்தங்கள் 10 கிராமுக்கு ரூ. 126 அதிகரித்து ரூ.72,929 என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், எம்.சி.எக்ஸ் (MCX) ஃப்யூச்சர்ஸில் டிசம்பர் 2024 காலாவதியாகும் வெள்ளிக்கான எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு கிலோவுக்கு ரூ. 101 அதிகரித்து ரூ.88,400-க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க : எஃப்.டி-க்கு 9 சதவீதம் வட்டி: இந்த ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளை நோட் பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com