₹.55 ஆயிரத்தை கடந்த தங்கம்: புதிய விலை தெரியுமா?

தங்கம் இன்று பவுனுக்கு ரூ.55 ஆயிரததை கடந்தது. வெள்ளி கிலோ ரூ.1 லட்சத்தை நெருங்கிவருகிறது.

Published on: September 16, 2024 at 11:07 am

Gold Rate today in Chennai | சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,880 ஆக நிர்ணயிக்கப்பட்டு, பவுன் ரூ.55,040 ஆக காணப்படுகிறது. 24 காரட் தங்கம் ரூ.7335 ஆக நிர்ணயிக்கப்பட்டு, ரூ.58680 ஆக காணப்படுகிறது. இது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் பவுனுக்கு ரூ.120 அதிகமாகும்.

வெள்ளி விலை

வெள்ளியை பொறுத்தமட்டில் கிராம் ரூ.98 ஆக நிர்ணயிக்கப்பட்டு, கிலோ வெள்ளி ரூ.98 ஆயிரமாக உள்ளது. நேற்று கிராம் ரூ.97 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ ரூ.97 ஆயிரமாக இருந்தது.
ஆக நேற்றுடன் ஒப்பிடுகையில் வெள்ளி கிலோ ரூ.1000 உயர்ந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் வெள்ளி கிராம் ரூ.89.50க்கு விற்பனையானது. அந்த வகையில், வெள்ளி கிலோவுக்கு கிட்டத்தட்ட 9 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் தங்கம் விலை

மும்பையில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.73,690 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளி கிலோ ரூ.89130 ஆக காணப்படுகின்றது.

கொல்கத்தாவில் தங்கம் விலை

கொல்கத்தாவில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.73590 ஆக காணப்படுகின்றது. வெள்ளி விலை ரூ.86740 ஆகும்.

டெல்லியில் தங்கம் விலை

டெல்லியில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.73560 ஆக காணப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.86710 ஆக காணப்படுகின்றது.

எம்.சி.எக்ஸ் ஃபியூச்சர்ஸ்

அக்டோபர் 2024 இல் காலாவதியாகும் தங்க எம்சிஎக்ஸ் ஃபியூச்சர் ஒப்பந்தங்கள் 10 கிராமுக்கு ரூ. 686 அதிகரித்து ரூ.73510 என குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்.சி.எக்ஸ் ஃப்யூச்சர்ஸில் செப்டம்பர் 2024 காலாவதியாகும் வெள்ளிக்கான எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு கிலோவுக்கு ரூ. 89,244 ஆக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது, ரூ. 2149 அதிகரிப்பு ஆகும்.

இதையும் படிங்க : ₹.6, 500 கோடி திரட்டிய பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ்: இரட்டிப்பாகுமா முதலீட்டாளர்கள் பணம்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com