Gold Rate Today | தங்கம் இன்று பவுனுக்கு கிராமுக்கு ரூ.40 வீதம் அதிகரித்து பவுனுக்கு ரூ.320 உயர்வுடன் வர்த்தகமாகிறது.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Gold Rate Today | தங்கம் இன்று பவுனுக்கு கிராமுக்கு ரூ.40 வீதம் அதிகரித்து பவுனுக்கு ரூ.320 உயர்வுடன் வர்த்தகமாகிறது.
Published on: September 14, 2024 at 10:58 am
Gold Rate Today | தங்கம் விலை இன்றும் விலை அதிகரித்தது. இன்று கிராம் ரூ.40 அதிகரித்து பவுனுக்கு ரூ.320 வரை உயர்ந்து காணப்பட்டது. சென்னையை பொறுத்தவரை 22 காரட் தங்கம் கிராம் ரூ.6865 ஆகவும், பவுன் ரூ.54920 ஆகவும் காணப்படுகிறது.
24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7320 ஆக நிர்ணயிக்கப்பட்டு, பவுன் ரூ.58560 ஆக காணப்படுகின்றது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இது ரூ.320 அதிகமாகும்.
வெள்ளி விலை
வெள்ளியை பொறுத்தமட்டில் இன்று கிராமுக்கு ரூ.2 அதிகரித்து கிலோ ரூ.97 ஆயிரமாக காணப்படுகிறது. இம்மாத தொடக்கத்தில் செப்.4ஆம் தேதி வெள்ளி கிராம் ரூ.90 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ வெள்ளி ரூ.90 ஆயிரமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எம்.சி.எக்ஸ் (MCX) ஃப்யூச்சர்ஸில்
அக்டோபர் 2024ல் தங்க MCX எதிர்கால ஒப்பந்தங்கள் 10 கிராமுக்கு ரூ.356 அதிகரித்துள்ளது.
MCX ஃப்யூச்சர்ஸில் செப்டம்பர் 2024 காலாவதியாகும் வெள்ளிக்கான எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு கிலோவுக்கு ரூ. 87,485 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. இது, ரூ. 390 அதிகமாகும்.
இதையும் படிங்க : 4 ஆண்டுகளில் ரூ.10,000 SIP ₹.8.51 லட்சமாக உயர்வு: இந்த மியூச்சுவல் ஃபண்டு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com