ரூ.3 லட்சம் வரை ரிட்டன்; ஒரே ஆண்டில் நீங்க லட்சாதிபதி: இந்த மியூச்சவல் ஃபண்டை பாருங்க!

Mutual Funds | லார்ஜ் மற்றும் மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு குறித்து பார்க்கலாம். பொதுவாக லார்ஜ் கேப் ஃபண்டுகள் 80 சதவீதத்தை பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன.

Published on: September 24, 2024 at 10:11 am

Mutual Funds | இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) பரஸ்பர நிதிகளின் வகைப்பாட்டின் படி, லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் தங்கள் முதலீடுகளில் குறைந்தது 80 சதவீதத்தை பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன. மேலும், சந்தை மூலதனத்தின் அடிப்படையில் லார்ஜ் கேப் நிறுவனங்கள் நாட்டின் முதல் 100 நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்கள் அடிப்படையில் வலுவானவை என்று கருதப்படுகின்றன.

மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்

மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் தங்கள் முதலீட்டில் 65 சதவீதத்தை மிட் கேப் பங்குகளில் வைத்திருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள மிட் கேப் நிறுவனங்கள் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் 101 முதல் 250 வது இடத்தில் உள்ளன. அதாவது பல மிட்கேப் நிறுவனங்கள் லார்ஜ் கேப் என்ற நிலையை அடைய உள்ளன. இந்த நிலையில் கடந்த ஓராண்டில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த லார்ஜ் அண்ட் மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டு குறித்து பார்க்கலாம்.

லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டு

லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் இன்வெஸ்கோ இந்தியா லார்ஜ் கேப் ஃபண்டு கடந்த ஓராண்டில் 47.42 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்துள்ளது. இந்தப் ஃபண்டில் ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம். இந்தப் ஃபண்டில் மாதம் ரூ.20 ஆயிரம் முதலீடு செய்திருந்தால் முதலீட்டாளர் ஓராண்டில் 2.98 லட்சம் ரிட்டன் பெறுவார்.

மிட்கேப் ஃபண்டு

மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டை பொறுத்தவரை மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்டு குரோத் டைரக்ட் முதலிடத்தில் உள்ளது. இந்தப் ஃபண்டில் மாதம் ரூ.20 ஆயிரம் முதலீடு, ரூ.3.32 லட்சமாக உயர்ந்துள்ளது.

(Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். திட்டத்தின் கடந்தகால வருவாய் எதிர்கால லாபத்துக்கு எவ்விதத்திலும் உத்ரவாதம் அளிக்காது. திராவிடன் டைம்ஸ் குறிப்பிட்ட எந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தையும் விளம்பரப்படுத்தவில்லை. இதில், முதலீடு செய்வது முதலீட்டாளரின் தனிப்பட்ட விருப்பு, பொறுப்பை சார்ந்தது.)

இதையும் படிங்க : இன்னும் 10 நாள்கூட இல்ல, எஸ்.பி.ஐ சிறப்பு எஃப்.டி: உடனே முந்துங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com