Fixed Deposit: சீனியர் சிட்டிசன்கள் இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்தால் எட்டு சதவீத வட்டி கிடைக்கும்.
Fixed Deposit: சீனியர் சிட்டிசன்கள் இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்தால் எட்டு சதவீத வட்டி கிடைக்கும்.

Published on: December 22, 2025 at 7:06 pm
சென்னை, டிச. 22 2025: பாதுகாப்பான முதலீடு மற்றும் எதிர்கால தேவைக்காக சிறந்த சேமிப்பு திட்டமாக ஃபிக்சட் டெபாசிட் பார்க்கப்படுகிறது. சாதாரண குடிமக்களை காட்டிலும் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. அந்த வகையில், மூத்த குடிமக்கள் இப்போது மூன்று வருட கால எஃப்டி- முதலீடுக்கு அதிகபட்சம் 8% வரை வட்டி பெறலாம். ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் சிறந்த விகிதத்தில் முன்னணியில் உள்ளன.
2025-ல் மூன்று ஆண்டுகளுக்கு மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) முதலீடு செய்தால், சில வங்கிகள் அதிகபட்சம் 8% வரை வட்டி வழங்குகின்றன.
மூன்று ஆண்டு கால ஃபிக்சட் டெபாசிட் முதலீட்டுக்கு சிறு நிதி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை இப்போது பார்க்கலாம்.
ஜானா சிறு நிதி வங்கி: 8% வட்டி
உத்கர்ஷ் சிறு நிதி வங்கி: 8% வட்டி
உஜ்ஜிவன் சிறு நிதி வங்கி: 7.7% வட்டி
ஏயூ சிறு நிதி வங்கி: 7.6% வட்டி
எக்விட்டாஸ், ஷிவாலிக், ஸ்லைஸ் சிறு நிதி வங்கிகள்: 7.5% வட்டி
இந்த முதலீட்டு திட்டத்தில் அதிகபட்சம் ரூ.3 கோடி வரை முதலீடு செய்யலாம். மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். சிறு நிதி வங்கிகளில் முதலீடு செய்பவர்களுக்கு DICGC காப்பீடு ரூ.5 லட்சம் வரை உள்ளது.
ஒரு வங்கியில் வட்டி வருமானம் ரூ.1 லட்சத்தை தாண்டினால் TDS கழிக்கப்படும். மொத்த வருமானம் ரூ.12 லட்சத்துக்கு குறைவாக இருந்தால், வயது வந்தவர்கள் படிவம் 15H (Form 15H) சமர்ப்பித்து TDS தவிர்க்கலாம். இந்த வட்டி விகிதங்கள் மூன்று ஆண்டு கால முதலீடுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
இதையும் படிங்க : சீனியர் சிட்டிசன் பேங்க் FD ஸ்கீம்; ₹1 லட்சம் வட்டி வருவாய் பெறுவது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com