மத்திய பட்ஜெட்டில் கேரளம் புறக்கணிப்பு.. சி.பி.எம் மாநிலம் தழுவிய போராட்டம்!

Union Budget 2026: மத்திய பட்ஜெட்டில் கேரளம் புறக்கணிக்கப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Published on: February 4, 2026 at 11:52 am

திருவனந்தபுரம், பிப்.4, 2026: கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய பட்ஜெட்டின் கேரள புறக்கணிப்புக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிப்ரவரி 3 அன்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கருப்பு கொடிகளை ஏற்ற திட்டமிட்டுள்ளது.

மேலும்,இந்த “மக்கள் விரோத பட்ஜெட்”க்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்குமாறு அது கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், சி.பி.எம் தரப்பில் வெளியான அறிக்கையில், “இந்தியாவின் வரைபடத்தில் கேரளா இல்லை என்ற வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நடைபெற்ற சந்திப்பில் முன்வைக்கப்பட்ட 29 கோரிக்கைகளும் எந்தவித கவனத்திற்கும் உட்படுத்தப்படவில்லை என்றும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Budget 2026: 17 புற்றுநோய் மருந்துகள் விலை குறைப்பு.. முக்கிய அம்சங்கள்!

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா!
Justice Nagarathna

நிலுவை வழக்குகளை குறைக்க நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அவசியம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com