கிளீன் மேக்ஸ் ஐ.பி.ஓ வெளியீடு.. மார்ச் 2 பட்டியல்!

Clean Max Enviro IPO: கிளீன் மேக்ஸ் என்விரோ எனர்ஜி சொலுசன்ஸ் நிறுவனத்தின் முதல் பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) சந்தையில் இன்று (பிப்.23, 2026) திறக்கப்பட்டது. இதன் முக்கிய விவரங்களை பார்க்கலாம்.

Published on: February 23, 2026 at 11:14 am

சென்னை, பிப்.23, 2026: கிளீன் மேக்ஸ் என்விரோ எனர்ஜி சொலுசன்ஸ் நிறுவனத்தின் முதல் பங்கு வெளியீடு இன்று (திங்கள்கிழமை) வெளியாகியுள்ளது. இதன் வெளியீட்டு மதிப்பு ரூ.3,100 கோடிகள் ஆகும். இந்த நிறுவனத்தை பொறுத்தரை, தொழிற்சாலைகள், ஐ.டி பூங்காக்கள், மால்கள் போன்றவற்றுக்கு சூரிய, காற்று மற்றும் ஹைப்ரிட் (சோலார் + காற்று) மின்சாரம் நீண்டகால ஒப்பந்தங்களின் மூலம் வழங்குகிறது.

நிறுவனத்தின் நிதி நிலை

FY 2025 வருவாய்: ₹1,610.34 கோடி
FY 2025 லாபம்: ₹19.43 கோடி (FY 2024 இல் ₹37.64 கோடி இழப்பிலிருந்து மீண்டது)

சந்தை நிலவரம்

ஐ.பி.ஓ திறக்கும் முன், GMP சுமார் ₹7 பங்கு ஒன்றுக்கு இருந்தது. இது முன்பு ₹14 இருந்ததை விட குறைந்துள்ளது, அதாவது சந்தையில் மிதமான ஆர்வம் உள்ளது. இதில் ₹1,200 கோடிக்கு ஐ.பி.ஓ புதிய வெளியீடாகவும் உள்ளது. இந்த நிலையில், இந்த வெளியீடு பிப்ரவரி 25 அன்று மூடப்படும், பங்குகள் மார்ச் 2 அன்று பட்டியலிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 7.75% எஃப்.டி வட்டி விகிதம் திருத்தம்.. சீனியர் சிட்டிசன்கள் நோட் பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com