Budget 2026: 17 புற்றுநோய் மருந்துகள் விலை குறைப்பு.. முக்கிய அம்சங்கள்!

Budget 2026: 2026ஆம் ஆண்டு பட்ஜெட்டில் புற்றுநோய் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Published on: February 2, 2026 at 11:46 am

புதுடெல்லி, பிப்.2, 2026: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மக்களவையில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தார். இந்நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்துப் பார்க்கலாம்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

மூலதனச் செலவுகள்: சாலை, ரயில், துறைமுகம், விமான நிலையம் போன்ற அடிப்படை வசதிகளை விரிவாக்கம் செய்ய அதிக நிதி ஒதுக்கீடு.
உள்நாட்டு உற்பத்தி : “மேக் இன் இந்தியா”க்கு வலுவூட்டும் வகையில் உற்பத்தி துறைக்கு ஊக்குவிப்பு.
வரி எளிமைப்படுத்தல் : வரி செலுத்தும் முறைகளை எளிதாக்கும் நடவடிக்கைகள்.
டிஜிட்டல் & ஏ.ஐ திட்டம் : செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு தெளிவான திட்டம்.
நிதி ஒழுங்கு: நிதி பற்றாக்குறை 4.3% ஆகக் கட்டுப்படுத்தும் திட்டம்.

இதையும் படிங்க: ரூ.20 லட்சம் வரை வருமான வரி இல்லை? மூத்தக் குடிமக்களுக்கு தனி வருமான வரம்பு?

பொருளாதார இலக்கு

அடுத்த ஆண்டில் 7% பொருளாதார வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பட்ஜெட், வளர்ச்சியை ஊக்குவிக்கும் போது நிதி ஒழுங்கையும் காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் மருந்துகள் விலை குறைப்பு

இந்த ஆண்டின் பட்ஜெட்டில், 17 முக்கிய புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்கவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் செலவுடைய மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கப்போகின்றன. மேலும், வெளிநாட்டில் சிகிச்சை பெறும் குடும்பங்களுக்கு டி.சி.எஸ் (TCS- Tax Collected at Source) 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் சி.ஓ.ஓ. மணீஷ் டோடேஜா, “17 முக்கிய புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்கவரி விலக்கு அளித்திருப்பது நோயாளிகளின் சிகிச்சைச் செலவை நேரடியாகக் குறைக்கும். இது நோயாளி நலனையும், உயிர் காக்கும் சிகிச்சைகளுக்கான அணுகலையும் வலுப்படுத்தும்.” என்றார்.

இதையும் படிங்க: Budget 2026: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் நீக்கம்- கிராமப்புறத்தினர் பாதிப்பு.. காங்கிரஸ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com