Maharashtra municipal elections: மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து, பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (ஜன.15, 2026) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Maharashtra municipal elections: மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து, பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (ஜன.15, 2026) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: January 13, 2026 at 6:21 pm
மும்பை, ஜன.13, 2026: மகாராஷ்டிரா மாநிலத்துக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வியாழக்கிழமை (ஜன.15, 2026) பங்குச் சந்தைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலையொட்டி வரும் வியாழக்கிழமை, மும்பை பங்குச்சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச்சந்தை (NSE) மூடப்பட்டிருக்கும்.
இதனால் ஈக்விட்டி, டெரிவேட்டிவ்ஸ் மற்றும் கமாடிட்டி பிரிவுகளில் வர்த்தகம் நடைபெறாது. ஜனவரி 15ஆம் தேதி காலாவதியாகும் ஒப்பந்தங்கள், ஒரு நாள் முன்பே தீர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மாநில உள்ளாட்சித் தேர்தலில், வாக்குப்பதிவை எளிதாக்கும் வகையில், மகாராஷ்டிரா அரசு மாநிலம் முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளுக்காக பொது விடுமுறையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் கொடுத்தால் பணம்? நெகிழி மறுசுழற்சியில் அவ்ரோ இந்தியா புதிய மைல்கல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com