பாஸ்மதி அரிசி விலை கடும் சரிவு.. 7-10 சதவீதம் வரை வீழ்ச்சி.. என்ன காரணம்?

Basmati rice prices fallen : பாஸ்மதி அரிசி விலை 7–10% வரை குறைந்துள்ளது. காரணம், ஈரான் போரால் மேற்காசியாவில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சுமார் 4 லட்சம் டன் பாஸ்மதி அரிசி துறைமுகங்களில் சிக்கிக் கிடக்கிறது.

Published on: March 6, 2026 at 4:47 pm

புதுடெல்லி, மார்ச் 6, 2026: ஈரான்- அமெரிக்கா போரால் பாஸ்மதி அரிசி விலை 7–10% வரை குறைந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ஈரான் போரால் மேற்காசியாவில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுமார் 4 லட்சம் டன் பாஸ்மதி அரிசி துறைமுகங்களில் மற்றும் கடல் வழித்தடங்களில் சிக்கிக் கிடக்கின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உள்ளூர் சந்தையில் அதிக அளவு சப்ளை உருவாகி விலை சரிவை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியான தகவலில், சுமார் 2 லட்சம் டன் பாஸ்மதி அரிசி இந்திய துறைமுகங்களில் சிக்கியுள்ளது.

மேலும் 2 லட்சம் டன் கடல் போக்குவரத்தில் சிக்கியுள்ளது, ஏனெனில் கப்பல்கள் மேற்காசியாவின் முக்கிய வழித்தடங்களை தவிர்க்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சர்வதேச சரக்கு கட்டணங்கள் 15–20% உயர்ந்துள்ளன. போர் காரணமாக காப்பீடு பிரீமியமும் அதிகரித்துள்ளதால், ஏற்றுமதி செலவு பெரிதும் உயர்ந்துள்ளது. மேலும், ஏற்றுமதி தடை காரணமாக, இந்திய சந்தையில் அதிக அளவு பாஸ்மதி அரிசி கிடைக்கிறது. இதனால் விலை 5–10% வரை குறைந்துள்ளது.

பெரும் நஷ்டம்

இதிலும், மேற்காசியா நாடுகளில் குறிப்பாக ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள், இந்திய பாஸ்மதி அரிசியின் முக்கிய சந்தைகளாக உள்ளன. இவை பாதிக்கப்பட்டதால், இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

திக சப்ளை காரணமாக, இந்தியாவில் பாஸ்மதி அரிசி விலை குறைந்துள்ளது. இது நுகர்வோருக்கு சாதகமாக இருந்தாலும், விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அஸ்ஸாமில் நொறுங்கி விழுந்த விமானம்.. இரு விமானிகள் உயிரிழப்பு.. யார் இவர்கள்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com