Bajaj Finserv Q3 FY26: பஜாஜ் ஃபின்சர்வ் Q3 FY26 நிகர லாபம் சிறிதளவு சரிவை சந்தித்துள்ளது; எனினும், லாபம் நிலைத்த நிலையில் இருந்தாலும், வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
Bajaj Finserv Q3 FY26: பஜாஜ் ஃபின்சர்வ் Q3 FY26 நிகர லாபம் சிறிதளவு சரிவை சந்தித்துள்ளது; எனினும், லாபம் நிலைத்த நிலையில் இருந்தாலும், வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

Published on: February 4, 2026 at 9:50 pm
சென்னை பிப்ரவரி 4, 2026; பஜாஜ் ஃபின்சர்வ் Q3 FY26 முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, பஜாஜ் ஃபின்சர்வின் மூன்றாம் காலாண்டு (Q3 FY26) லாபம் சிறிதளவு குறைந்து ₹2,229 கோடியாக பதிவானது.
இதற்கிடையில், ஒருங்கிணைந்த வருமானம் (Consolidated Income) 24% உயர்வு கண்டது. இதற்கு, கடன் வழங்கல் (Lending) மற்றும் காப்பீட்டு (Insurance) வணிகங்களில் வலுவான வளர்ச்சி இதற்கு காரணமாகும்.
பஜாஜ் ஃபைனான்ஸ் Q3 FY26 முடிவுகள்:
வருடாந்திர (YoY) லாபம்: பஜாஜ் ஃபைனான்ஸ் மூன்றாம் காலாண்டில் (Q3 FY26) 0.09% அளவுக்கு சிறிய சரிவை பதிவு செய்தது.
நிகர லாபம் (Net Profit): Q3 FY26-இல் ஒருங்கிணைந்த நிகர லாபம் ₹2,229 கோடி.
முந்தைய ஆண்டு (Q3 FY25): அப்போது நிகர லாபம் ₹2,231 கோடி.
பஜாஜ் ஜெனரல் இன்சூரன்ஸ் Q3 FY26;
நிகர பிரீமியம் வருமானம் (Net Premium Income): Q3 FY26-இல் ₹2,456 கோடி, Q3 FY25-இல் இருந்த ₹2,403 கோடியுடன் ஒப்பிடுகையில் உயர்வு.
மொத்த பிரீமியம் (Gross Written Premium): Q3 FY26-இல் ₹7,389 கோடி, Q3 FY25-இல் இருந்த ₹6,626 கோடியுடன் ஒப்பிடுகையில் 12% அதிகரிப்பு.
வளர்ச்சி: துணை நிறுவனமான பஜாஜ் ஜெனரல் இன்சூரன்ஸ், காப்பீட்டு வணிகத்தில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
மொத்தத்தில், நிகர பிரீமியம் வருமானமும், மொத்த பிரீமியமும் இரண்டிலும் உயர்வு காணப்பட்டதால், நிறுவனம் நல்ல செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க; இந்திய பங்குச் சந்தை மந்தம்.. இன்போசிஸ் பங்கு 7.4% சரிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com