Adani Investment Plan : அடுத்த 10 ஆண்டுகளில், இந்திய மாநிலங்களில் 66 பில்லியன் டாலர் முதலீடு செய்ய அதானி திட்டமிட்டுள்ளார்.
Adani Investment Plan : அடுத்த 10 ஆண்டுகளில், இந்திய மாநிலங்களில் 66 பில்லியன் டாலர் முதலீடு செய்ய அதானி திட்டமிட்டுள்ளார்.

Published on: January 21, 2026 at 3:08 pm
Updated on: January 21, 2026 at 3:16 pm
சென்னை, ஜன.21, 2026: அதானி குழுமம், அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் சுமார் 66 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தப் பணம், விமானப் போக்குவரத்து, தூய்மையான ஆற்றல், நகர்ப்புற அடிக்கட்டு, டிஜிட்டல் தளங்கள், மேம்பட்ட உற்பத்தி ஆகிய முன்னணி துறைகளில் முதலீடு செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், அதானி என்டர்பிரைசஸ் இயக்குநர் பிரணவ் அதானி, முதலீட்டின் அளவு மற்றும் துறைகளின் பரவலை விளக்கினார். அப்போது, இந்த திட்டம் மகாராஷ்டிரா, அசாம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், தனித்தனி சொத்து உருவாக்கத்திலிருந்து விலகி, தொழில்நுட்ப அடிப்படையிலான ஒருங்கிணைந்த அடிக்கட்டு தளங்கள் உருவாக்கும் நோக்கில் இந்த முதலீடு செய்யப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதானி குழுமம், நவி மும்பையை முக்கிய வளர்ச்சி மையமாகக் கருதுகிறது. இதற்கு முன்னணி காரணமாக, இந்தியாவின் மிகப்பெரிய புதிய பசுமை விமான நிலையங்களில் ஒன்றான நவி மும்பை சர்வதேச விமான நிலையம் உள்ளது.
இந்த விமான நிலையம் 2025 டிசம்பர் 25 அன்று செயல்பாட்டைத் தொடங்கியது. இது, நவி மும்பையை பெரும் வளர்ச்சி மையமாக மாற்றும் முக்கிய அடிக்கட்டு திட்டமாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், அதானி குழுமத்தின் முதலீட்டு திட்டங்களில், நவி மும்பை முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 700 புள்ளிகள் இழப்பு.. ₹10 டிரில்லியன் இழப்பு? முதலீட்டாளர்கள் ஷாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com