விஷம்போல் ஏறிய தங்கம்..புதிய விலைய தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

Gold Rate Today | தங்கம் இன்று கிராமுக்கு ரூ.75 வீதம் அதிகரித்து பவுனுக்கு ரூ.600 உயர்வுடன் வர்த்தகமாகிறது.

Published on: September 21, 2024 at 10:39 am

Gold Rate today in Chennai | சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,960 ஆக நிர்ணயிக்கப்பட்டு, பவுன் ரூ.55,680 ஆக காணப்படுகிறது.

24 காரட் தங்கம் ரூ.7,415 ஆக நிர்ணயிக்கப்பட்டு, ரூ.59,320 ஆக காணப்படுகிறது. இது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் பவுனுக்கு ரூ. 600 உயர்வாகும்.

வெள்ளி விலை

வெள்ளியை பொறுத்தமட்டில் கிராம் ரூ.98 ஆக நிர்ணயிக்கப்பட்டு, கிலோ வெள்ளி ரூ.98,000 ஆயிரமாக உள்ளது. நேற்று கிராம் ரூ.96 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ ரூ.97.50 ஆயிரமாக இருந்தது.
ஆக நேற்றுடன் ஒப்பிடுகையில் வெள்ளி கிலோ ரூ.500 உயர்ந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் வெள்ளி கிராம் ரூ.89.50க்கு விற்பனையானது.

மற்ற நகரங்களில் தங்கம் விலை

தங்கத்தை பொறுத்தவரை மும்பையில் 10 கிராம் ரூ.73,650 ஆகவும், கொல்கத்தாவில் 10 கிராம் ரூ.73,550 ஆகவும், டெல்லியில் ரூ.73,520 ஆகவும் காணப்படுகிறது.

மற்ற நகரங்களில் வெள்ளி விலை

டெல்லியில் வெள்ளி கிலோ ரூ.89,650 ஆகவும், கொல்கத்தாவில் கிலோ ரூ.89,690 ஆகவும், மும்பையில் ரூ.89,810 ஆகவும் காணப்படுகிறது.

எம்.சி.எக்ஸ் (MCX) ஃபியூச்சர்ஸ்

அக்டோபர் 2024 இல் காலாவதியாகும் தங்க MCX எதிர்கால ஒப்பந்தங்கள் 10 கிராமுக்கு ரூ. 395 அதிகரித்து ரூ.73,450 என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், எம்.சி.எக்ஸ் (MCX) ஃப்யூச்சர்ஸில் செப்டம்பர் 2024 காலாவதியாகும் வெள்ளிக்கான எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு கிலோவுக்கு ரூ. 1708 அதிகரித்து ரூ. 90,007-க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com