சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 480 அதிகரித்து விற்பனையாகிறது.
சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 480 அதிகரித்து விற்பனையாகிறது.
Published on: November 18, 2024 at 10:20 am
Gold Rate today in Chennai | கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து தொடர்ந்து சரிவை சந்தித்து வந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தங்கம் விலை சவரன் ரூ. 60 ஆயிரத்தை நெருங்கிய நிலையில், கடந்த சில தினங்களாக குறைந்து ரூ. 56 ஆயிரத்திற்கு கீழ் சென்றது. இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நேற்று கிராம் ரூ. 6,935 ஆகவும், பவுன் ரூ. 55,480 ஆகவும் இருந்தது. இந்நிலையில், தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 60 அதிகரித்து கிராம் ரூ. 6,995 ஆகவும், பவுன் ரூ. 55,960 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொருத்தவரை கிராம் ரூ. 7,500 ஆகவும், பவுன் ரூ. 60,000 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலையை பொருத்தவரை கடந்த சில தினங்களாக மாற்றமின்றி கிராம் ரூ. 99 ஆகவும் கிலோ வெள்ளி ரூ. 99,000 ஆகவும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க கடந்த ஓராண்டில் 35 சதவீதம் வரை ரிட்டன்; இந்த மியூச்சுவல் ஃபண்டுகளை செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com