Vettaiyan OTT Release date | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் அமேசான் OTT தளத்தில் வெளியாகிறது.
Vettaiyan OTT Release date | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் அமேசான் OTT தளத்தில் வெளியாகிறது.
Published on: October 23, 2024 at 10:59 am
Vettaiyan OTT Release date | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியாகி இன்றுடன் 13 நாட்கள் ஆகின்றது.
ஜெய் பீம் பட புகழ் டி.ஜே.ஞானவேல் எழுதி இயக்கிய இப்படத்தில் தர்பார் படத்திற்கு பிறகு, ரஜினி மீண்டும் போலீஸாக அதிரடி நாயகனாக நடித்துள்ளார். படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரோகினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவையும், பிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளையும் ஆற்றியுள்ளனர்.
படம் வெளியாவதற்கு முன்பே, வேட்டையன் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் வேட்டையனின் டிஜிட்டல் உரிமையாளரான அமேசான் பிரைம் வீடியோ இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில், திரைப்படம் 30 நாட்களுக்குப் பிறகு ஸ்ட்ரீம் செய்யப்படும்.
அந்தவகையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வேட்டையன் படத்தின் OTT வெளியீட்டு தேதி நவம்பர் 8, 2024 (வெள்ளிக்கிழமை) ஆகும். அப்படி இல்லாதபட்சத்தில் நவம்பர் 10 ஆக இருக்கு சாத்தியம் உள்ளது.
இதையும் படிங்க விடாமல் துரத்தும் கருப்பு; மீண்டும் புதிய நோய்: நடிகை சமந்தா அவதி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com