Global Hunger Alert : உலகின் 16 பகுதிகளில் பசி, உணவுப் பஞ்சம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
Global Hunger Alert : உலகின் 16 பகுதிகளில் பசி, உணவுப் பஞ்சம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

Published on: November 28, 2026 at 5:11 pm
கெய்ரோ, நவ.28, 2026: உலகின் 16 நாடுகள் மற்றும் பகுதிகளில் அடுத்த ஆறு மாதங்களில் கடுமையான உணவுப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), உலக உணவுத் திட்டம் (WFP) இணைந்து வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், சூடான், தெற்கு சூடான், சோமாலியா, வடக்கு நைஜீரியா மற்றும் ஏமன் ஆகிய ஐந்து நாடுகள் மிக அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த நாடுகளில் நிலவும் போர், உள்நாட்டுக் கலவரம், மக்கள் இடம்பெயர்வு, உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவை பசி அதிகரிப்பதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. மேலும், மனிதாபிமான உதவிகளுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதும் நிலைமையை மோசமாக்கியுள்ளது. 2022 முதல் 2025 வரை அதிக ஆபத்துள்ள ஐந்து நாடுகளுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவி நிதி சுமார் 62 சதவீதம் குறைந்துள்ளது.
சூடானில் மட்டும் சுமார் 1.95 கோடி மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். அந்நாட்டின் வடக்கு டார்பூர் மற்றும் தெற்கு கோர்டோபான் பகுதிகளில் 13 இடங்களில் அடுத்த ஆண்டு ஜனவரி வரை பஞ்சம் ஏற்படும் அபாயம் நீடிப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது. ஏமனில் மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதல்களால் மக்கள் இடம்பெயர்வதும், உணவுப் பொருட்கள் விநியோகம் பாதிக்கப்படுவதும் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன.
இதற்கிடையே, எல் நினோ பருவநிலை மாற்றத்தால் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் வறட்சி மற்றும் கடும் வெப்பமும், கிழக்கு ஆப்பிரிக்காவில் வெள்ளப்பெருக்கும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள விவசாயிகளுக்கு விதைகள் வழங்குதல், கால்நடைகளைப் பாதுகாத்தல், குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்கூட்டியே நிவாரண உதவிகளை வழங்குதல் அவசியம் என ஐ.நா. அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இதையும் படிங்க : காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்.. 8 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com