தொகுதி மறுவரையறை என்றால் என்ன? மசோதா நிலுவையில் இருப்பது ஏன்?

Delimitation Bill Explained: தொகுதி மறுவரையறை என்றால் என்ன? மசோதா நிலுவையில் இருப்பது ஏன்? என்பது குறித்து பார்க்கலாம்.

Published on: November 28, 2026 at 4:40 pm

புதுடெல்லி, நவ.28, 2026: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மறுநிர்ணயம் செய்வதும், மக்கள் தொகை உள்ளிட்ட அடிப்படைகளில் தொகுதிகளைச் சீரமைப்பதும் தொகுதி மறுவரையறை எனப்படுகிறது. இதற்காக மத்திய அரசு சார்பில் அமைக்கப்படும் அதிகாரம் கொண்ட தொகுதி மறுவரையறை ஆணையம் இந்தப் பணிகளை மேற்கொள்ளும். இந்தியாவில் இதுவரை 1952, 1963, 1973 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் இத்தகைய ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொகுதி மறுவரையறை ஆணையத்தின் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் அல்லது பணியில் உள்ளவர் நியமிக்கப்படுவார். தலைமைத் தேர்தல் ஆணையர் அல்லது அவரால் பரிந்துரைக்கப்படும் தேர்தல் ஆணையரும், சம்பந்தப்பட்ட மாநிலத் தேர்தல் ஆணையரும் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஆணையத்தின் உத்தரவுகள் சட்ட வலிமை கொண்டவை; அவற்றை நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடர முடியாது.

கடந்த ஏப்ரல் மாதம் 2026-ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளை மறுசீரமைக்க ஆணையம் அமைக்க வழிவகை செய்யப்பட்டது. அதே நேரத்தில், 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா மக்களவையில் தேவையான பெரும்பான்மையைப் பெறத் தவறியது. இதனால், அதனுடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெறாமல் நிலுவையில் உள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளன. அசாம், ஜம்மு-காஷ்மீர் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி, அரசியல் ஆதாயத்துக்காக தொகுதி எல்லைகள் மாற்றப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளன. 2029 தேர்தலுக்கு முன்பாக அரசியல் வரைபடத்தைத் தனக்குச் சாதகமாக மாற்ற பாஜக முயற்சிப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்துள்ளது.

இதற்கிடையே, புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிவுகளுக்காகக் காத்திருந்தால் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படும் என்பதால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களைப் பயன்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தும் வகையில் புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு? தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்!

ராகுல் காந்தி மீதான சொத்துக்குவிப்பு புகார்: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!
Rahul Gandhi Assets Case

ராகுல் காந்தி மீதான சொத்துக்குவிப்பு புகார்: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்: உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அஞ்சலி!
26/11 Mumbai Terror Attack Remembrance

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்: உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர்

மகளிர் இடஒதுக்கீட்டை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. அரசியலமைப்பு தினத்தில் பிரதமர் மோடி உறுதி
Women's Reservation

மகளிர் இடஒதுக்கீட்டை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.. அரசியலமைப்பு தினத்தில் பிரதமர் மோடி

உத்தரப் பிரதேச தேர்தல்.. காங்கிரஸ் – சமாஜ்வாதி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை.. 3 நாள்களில் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு!
UP Election Seat Sharing Talks

உத்தரப் பிரதேச தேர்தல்.. காங்கிரஸ் – சமாஜ்வாதி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை.. 3

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com