முன்பதிவில்லா ரயில் பெட்டியில் பயணம் செய்த விஜய் ஆண்டனி.. ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

Vijay Antony: ‘அப்பா குட்டி’ படத்தை விளம்பரப்படுத்த முன்பதிவில்லா ரயில் பெட்டியில் பயணம் செய்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.

Published on: November 22, 2026 at 12:49 pm

சென்னை, நவ.22, 2026: நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, தனது புதிதாக வெளியான ‘அப்பா குட்டி’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையிலிருந்து கோவைக்கு முன்பதிவில்லா ரயில் பெட்டியில் பயணம் மேற்கொண்டுள்ளார். சனிக்கிழமை காலை 6 மணிக்குப் புறப்பட்ட கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் பயணம் செய்துள்ளார்.

இந்தப் பயணத்தின்போது சக பயணிகளுடன் இணைந்து பயணம் செய்த விஜய் ஆண்டனி, அவர்களுடன் உரையாடியுள்ளார். மேலும், பயணத்தின் சுவாரசியமான தருணங்களையும், பயணிகளுடனான சந்திப்புகளையும் பதிவு செய்ய சிறப்பு டிராவல் வ்லாக் ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.

கோவைக்குச் சென்றுள்ள அவர், அங்குள்ள திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களைச் சந்திக்கவும், படத்தைப் பார்த்த பார்வையாளர்களின் நேரடி கருத்துகளைக் கேட்டறியவும் திட்டமிட்டுள்ளார். இந்தப் பயணத்தின் மூலம் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாவில்தான் அதிக மரியாதை, புகழ்.. நடிகை சமீரா ரெட்டி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com