Mohammed Shami: முகமது ஷமி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Mohammed Shami: முகமது ஷமி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Published on: November 18, 2026 at 12:59 pm
புதுடெல்லி, நவ.18, 2026: ஐபிஎல் அணிகளுக்கிடையேயான வீரர்கள் பரிமாற்றத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றம் அணி நிர்வாகத்தின் புதிய திட்டமிடலின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
இந்தப் பரிமாற்றத்தில் ஷமி ரூ.10 கோடி ஒப்பந்தத் தொகையிலிருந்து ரூ.8 கோடிக்கு ராஜஸ்தான் அணிக்கு மாறியுள்ளார். புதிய பந்தில் விக்கெட் வீழ்த்தும் திறன் மற்றும் அனுபவம் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சுப் பிரிவுக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், லக்னோ அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மணிமாறன் சித்தார்த்தும் ரூ.75 லட்சம் ஒப்பந்தத் தொகையில் ராஜஸ்தான் அணிக்கு மாறியுள்ளார். பதிலுக்கு, இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கரண் ரூ.2.4 கோடிக்கு ராஜஸ்தானிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த வீரர்கள் பரிமாற்றம் இரு அணிகளின் 2027 ஐபிஎல் தொடருக்கான வியூகத்தில் முக்கிய மாற்றமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க : சென்னையின் இதயத் துடிப்பாக மாறிய ‘தல’ தோனி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com