Tabu King100 First Look: நாகார்ஜுனாவின் ‘கிங்100’ படத்தில் தபுவின் கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிறந்தநாளில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
Tabu King100 First Look: நாகார்ஜுனாவின் ‘கிங்100’ படத்தில் தபுவின் கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிறந்தநாளில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Published on: November 5, 2026 at 12:48 pm
ஹைதராபாத், நவ.5, 2026: நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்100’ திரைப்படத்தில் நடிகை தபு ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. தபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த போஸ்டரையும், கதாபாத்திர அறிமுக வீடியோவையும் தயாரிப்பு நிறுவனமான அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் தபு, ‘மஹந்தி ஜான்சி ராணி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரச குடும்பப் பின்னணியைக் கொண்டவராகவும், அரசியலில் செல்வாக்கு மிக்கவராகவும் அவரது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. உலகில் கடின உழைப்பை நம்புபவர்கள், அதிர்ஷ்டத்தை நம்புபவர்கள் என இருவகையினர் இருப்பதாகவும், அதிர்ஷ்டத்தை நம்புபவர்களைத் தனக்குப் பிடிக்காது என்றும் அந்த அறிமுக வீடியோவில் தபு பேசுகிறார்.
இப்படத்தில் நாகார்ஜுனா கதாநாயகனாக நடிக்கிறார். ‘கிங்100’ திரைப்படம் நாகார்ஜுனாவின் 100ஆவது படமாகும். கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் தலைப்பு மற்றும் முதல் அறிமுகக் காட்சிகள் வெளியிடப்பட்டன. நாகார்ஜுனா – தபு ஜோடி சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிப்பதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.ஏ. கார்த்திக் இயக்கும் இப்படத்தை அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, நவீன் நூலி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். இப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தில் இணைந்தார் ஸ்ரீலீலா.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com