Anbil Mahesh Bail Plea: விசாரணைக்கு ஒத்துழைப்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என அன்பில் மகேஷ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Anbil Mahesh Bail Plea: விசாரணைக்கு ஒத்துழைப்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என அன்பில் மகேஷ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Published on: November 5, 2026 at 12:18 pm
சென்னை, நவ.5, 2026: தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 26ஆம் தேதி அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அன்பில் மகேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரினர். இதையடுத்து, நவம்பர் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
போலீஸ் காவல் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நவம்பர் 4ஆம் தேதி அன்பில் மகேஷ் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, விசாரணையின்போது முறையாக நடத்தப்பட்டாரா, உணவு மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டதா என நீதிபதி கேட்டறிந்தார்.
இதையடுத்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் புழல் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அன்பில் மகேஷ் தனது ஜாமின் மனுவில், “விசாரணைக்கு ஒத்துழைப்பதால் ஜாமின் வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையும் படிங்க : விஜயை தொடர்ந்து அரசியலில் நடிகர் தனுஷ்? ஆர்.எஸ்.எஸ். தலைவர் உடன் சந்திப்பா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com