தீபாவளிக்கு முன் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு.. முழு விவரம்

Aavin Price Hike Before Diwali: தீபாவளிக்கு முன் ஆவின் பால் பொருட்கள் விலை அதிரடியாக உயர்வை கண்டுள்ளது.

Published on: October 27, 2026 at 3:59 pm

சென்னை, அக்.27, 2026: தமிழக அரசின் ஆவின் நிறுவனம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 63 வகையான பால் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு அக்டோபர் 28ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெய், வெண்ணெய், தயிர், மில்க்‌ஷேக் மற்றும் பல்வேறு இனிப்பு வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் தீபாவளிக்காக இனிப்புகள் மற்றும் பால் பொருட்களை வாங்கும் பொதுமக்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

புதிய விலைப் பட்டியலின்படி, 100 கிராம் நெய் ரூ.85-லிருந்து ரூ.95 ஆகவும், 500 கிராம் நெய் ரூ.365-லிருந்து ரூ.400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 100 கிராம் வெண்ணெய் ரூ.60-லிருந்து ரூ.70 ஆகவும், 500 மில்லி தயிர் ரூ.35-லிருந்து ரூ.40 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மில்க்‌ஷேக் உள்ளிட்ட பிற பால் பொருட்களின் விலைகளும் மாற்றப்பட்டுள்ளன. மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் பண்டிகைக் காலத்தில் ஆவின் பொருட்களை வாங்கும் நுகர்வோர் கூடுதல் செலவுகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நீலகிரி மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து.. டூரிஸ்ட் நோட் பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com