Anbil Mahesh Judicial Custody: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
Anbil Mahesh Judicial Custody: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

Published on: October 27, 2026 at 2:04 pm
சென்னை, அக்.27, 2026: சென்னை: திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அன்பில் மகேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த காவல்துறையினர் விசாரணைக்குப் பின்னர் மருத்துவப் பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்பில் மகேஷை நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : அன்பில் மகேஷ் கைது.. பின்னணி என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com