டோரத்தி ஒ.டி.டி. தளத்தில் வெளியீடு.. எந்தத் தளம் தெரியுமா?

Dorothy Netflix Release: கார்த்திக் சுப்புராஜின் ‘டோரத்தி’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி உள்ளது.

Published on: October 27, 2026 at 1:53 pm

Updated on: October 27, 2026 at 1:54 pm

சென்னை, அக்.27, 2026: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து இயக்கியுள்ள ‘டொரத்தி’ (Dorothy) திரைப்படம் அக்டோபர் 23-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படம், கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

1990-களின் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், சிறுவயது நண்பர்களான கார்த்தி மற்றும் சுப்பு ஆகியோரின் வாழ்க்கையில் ஒரு பெண்ணின் வருகை ஏற்படுத்தும் மாற்றங்களைப் பேசுகிறது. திருநங்கைகளின் வாழ்க்கை, சமூகப் பாகுபாடு, நட்பு மற்றும் மனிதநேயம் உள்ளிட்ட அம்சங்களையும் கதை மையப்படுத்துகிறது.

இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்; கணேஷ் சிவா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். டொரத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : கீர்த்தி சுரேஷின் ‘அக்கா’ வெப் தொடர்.. நெட்ஃபிளிக்ஸில் அக்டோபர் 30-ல் வெளியீடு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com