சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி மாற்றம்.. மைக் ஹஸ்ஸி விலகல்!

Gareth Batty: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மைக் ஹஸ்ஸி விலகியுள்ள நிலையில், உதவிப் பயிற்சியாளராக கேரத் பேட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Published on: October 27, 2026 at 12:02 pm

Updated on: October 27, 2026 at 12:03 pm

சென்னை, அக்.27, 2026: ஐபிஎல் 2027 தொடருக்குத் தயாராகி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, தனது பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸியுடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த அவர், சிஎஸ்கே அணியின் முக்கியமான பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்தார்.

இதற்கிடையே, இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கேரத் பேட்டி, சிஎஸ்கே அணியின் புதிய உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இங்கிலாந்தின் சர்ரே கவுண்டி அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றியபோது, 2022 முதல் 2024 வரை தொடர்ந்து மூன்று முறை கவுண்டி சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல அணிக்கு வழிகாட்டினார்.

மேலும், சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் எரிக் சைமன்ஸும் அணியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உதவிப் பயிற்சியாளர் ராஜீவ் குமார், பீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஃபாஸ்டர் உள்ளிட்ட சிலரும் அணியின் பயிற்சிக் குழுவிலிருந்து விலகுகின்றனர்.

ஏற்கெனவே, நீண்டகால தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் விலகியதைத் தொடர்ந்து, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் புதிய தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளார். 2024, 2025 மற்றும் 2026 ஐபிஎல் தொடர்களில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத சிஎஸ்கே அணி, புதிய பயிற்சிக் குழுவுடன் 2027 தொடரில் வலுவான மறுவருகையை நோக்கி தயாராகி வருகிறது.

இதையும் படிங்க : அதிக ஒருநாள் சதம்.. மிதாலி ராஜை முந்திய ஹர்மன்பிரீத் கவுர்!

இந்திய பந்துவீச்சாளர்களின் நெருக்கடி.. பெரிய ரன்களை எடுக்க முடியாததற்குக் காரணம் என்ன? மைக்கேல் பிரேஸ்வெல் கருத்து
Death Bowling

இந்திய பந்துவீச்சாளர்களின் நெருக்கடி.. பெரிய ரன்களை எடுக்க முடியாததற்குக் காரணம் என்ன? மைக்கேல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com